Breaking News
recent

குவைத்தில் குறைந்தபட்சமாக 450 தினார் பெறும் சம்பளதாரர்களுக்கு இனி குடும்ப விசா.!


குவைத் நாட்டில் வசிக்கும் மூன்றில் இரண்டு பங்கு வெளிநாட்டினர் அதாவது சுமார் 3.3 மில்லியன் வெளிநாட்டினர் குவைத்தில் வசிப்பதாக கருதப்படுகிறது.

குவைத்தில் வாழும் வெளிநாட்டினர் தங்களுடைய மனைவி, பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களை உடன் வைத்துக் கொள்ள முன்பு 400 குவைத் தீனார் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது 2004 ஆம் ஆண்டு 250 முதல் தீனராக குறைக்கப்பட்டதை தொடர்ந்து குவைத்தில் குடும்பத்துடன் வசிப்போரின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 70 சதவிகிதமாக அதிகரித்தது.

உள்நாட்டு மக்கள் தொகையுடன் சமப்படுத்தும் நோக்கில் தற்போது குறைந்தபட்ச சம்பளம் 450 தீனாராக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பழைய சம்பள வரம்பின் அடிப்படையில் விசா வழங்கப்பட்டு குடும்பத்துடன் வாழும் அல்லது அவர்களுக்கு பிறக்கும் புதிய குழந்தைகளை இந்த உச்சவரம்பிலிருந்து விலக்களிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

எனினும், கீழ்க்காணும் 14 வகையான வேலைவாய்ப்பின் கீழ் வருவோருக்கு இந்த புதிய சம்பள கட்டுப்பாடு பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஆலோசகர்கள், நீதிபதிகள், சட்ட வல்லுனர்கள், ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள், மருந்தாளுனர்கள், பேராசிரியர்கள், பள்ளி கல்லூரி முதல்வர்கள், துணை முதல்வர்கள், ஆசிரியர்கள், கல்வி மேற்பார்வையாளர்கள், சமூக நல ஆலோசகர்கள், பரிசோதனைக்கூட உதவியாளர்கள், கல்வி நீதி மற்றும் பொருளாதார நிபுணர்கள், பொறியாளர்கள், இமாம்கள், மார்க்க பிரச்சாரகர்கள், முஅத்தின்கள், குர்ஆன் ஓதி தருபவர்கள், நூலகர்கள், சுகாதார அமைச்சக ஊழியர்களான செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள், மருத்துவ நிபுணர்கள், சமூக சேவையாளர்கள், மனநல ஆலோசகர்கள், பத்திரிக்கையாளர்கள், ஊடக ஊழியர்கள், நிருபர்கள், விளையாட்டு பயிற்சியாளர்கள், விமானிகள், விமான சிப்பந்திகள், இறந்தவர்களை குழிப்பாட்டுபவர் மற்றும் அடக்கம் செய்பவர்கள் ஆகியோர் இப்புதிய சம்பள வரையறையிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளனர்.

Source: Gulf News
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.