Breaking News
recent

துபாயில் நம்பர் பிளேட்டை 33 மில்லியன் திர்ஹத்திற்கு ஏலம் எடுத்த இந்தியர் மீது பார்க்கிங் விதி மீறல் நடவடிக்கை.!


துபாயில் பார்க்கிங் சட்டத்தை மீறிய 'அதிக விலை நம்பர் பிளேட்' இந்தியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் துபாயில் நடந்த பேன்ஸி நம்பர் பிளேட் ஏலத்தில் இந்தியர் கலந்து கொண்டு 33 மில்லியன் திர்ஹத்திற்கு D 5 என்ற நம்பர் பிளேட்டை வாங்கினார். 

அவர் எதிர்பார்த்தது போலவே உலக மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்டு அவருக்கு விளம்பரம் கிடைத்ததை நாம் அறிவோம்.

பெரிய மனிதருக்கு சின்ன புத்தி என்பது போல் இந்த நபர் 'மாற்றுத் திறனாளிகளுக்கு' பிரத்தியோகமாக ஒதுக்கப்பட்டு இருந்த பார்க்கிங் ஸ்லாட்டில் தனது ரோல்ஸ்ராய்ஸ் காரை நிறுத்த, அது சிசிடிவியில் பதிவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு 4 கரும்புள்ளிகளுடன் 1000 திர்ஹம் அபராதமும் செலுத்த நேரிட்டுள்ளது. மேலும் தனது செயலுக்கு மன்னிப்பும் கேட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து துபாய் போலீஸார் சொன்ன வார்த்தை இது 'சட்டத்திற்கு முன் எல்லோரும் சமம்'.

Source: Emirates 247
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.