Breaking News
recent

துபாயில் நம்பர் பிளேட்டை 33 மில்லியன் திர்ஹத்திற்கு ஏலம் எடுத்த இந்தியர்.!


துபாயில் நேற்று மரியோட் (JW Marriott Marquis) ஹோட்டலில் நடைபெற்ற பேன்ஸி நம்பர் பிளேட் ஏலத்தில் சுமார் 80 நம்பர் பிளேட்டுகள் கூடியிருந்த 300க்கு மேற்பட்ட ஏலதாரர்களுக்கு மத்தியில் பகிரங்க ஏலமிடப்பட்டன.

இதில் D 5 என்கிற ஒற்றை எண் நம்பர் பிளேட்டை ஏலம் எடுப்பதிலேயே மிகக்கடும் போட்டி நிலவியது, கடைசியில் அமீரகம், குவைத், அமெரிக்கா மற்றும் இந்தியாவில் 'ரியல் எஸ்டேட்' தொழிலில் ஈடுபட்டுள்ள 'பல்விந்தர் சஹானி'என்ற இந்திய வர்த்தகர் 33 மில்லியன் திர்ஹத்திற்கு ஏலமெடுத்ததுடன் கூடுதலாக மேலும் ஒரு நம்பர் பிளேட்டை 1 மில்லியன் திர்ஹத்திற்கும் ஏலமெடுத்தார்.

மூடத்தனங்களில் ஒன்றாக விளங்கும் எண் கணித சாஸ்திரத்தில் நம்பிக்கையுடைய இவர் ஏலம் எடுத்ததன் காரணத்தை கூறும்போது, ஆங்கில எழுத்தான D 4 வது எழுத்தாக அமைந்துள்ளதாலும் அதற்கு அடுத்து வரும் எண் 5 ஆக அமைந்து அதன் கூட்டுத்தொகை அவரது ராசி எண்ணான 9 ஆக வருவதால் ஏலம் எடுத்தாராம்? ஆனால் பைசாவுக்கும் புண்ணியமில்லாத அந்த பேன்ஸி எண் அவரிடம் வரும் போதே 33 மில்லியன் நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டு வந்ததை உணரும் நிலையில் இல்லை.

இதே நபர் கடந்தாண்டு நடைபெற்ற ஏலத்தில் 09 என்ற எண்ணை 25 மில்லியனுக்கு ஏலமெடுத்துள்ளராம். இவரைப்போல் எண் கணிதத்தில் நம்பிக்கையில்லாத நிலையில் பேன்ஸி எண் என்ற ஒற்றை அற்ப சுக காரணத்திற்காகவும் நம்பர் பிளேட்டுகள் ஏலம் போயின.

Q 77 என்ற எண் 4.52 மில்லியன் திர்ஹத்திற்கும்,
P 27 என்ற எண் 2.14 மில்லியன் திர்ஹத்திற்கும்,
R 7777 என்ற எண் 1.17 மில்லியன் திர்ஹத்திற்கும் ஏலம் போயுள்ளன.

2008 ஆம் ஆண்டு அபுதாபியில் நடைபெற்ற ஏலத்தில் எண் 1 என்ற நம்பர் பிளேட் 52.2 மில்லியன் திர்ஹத்திற்கு ஏலம் போனதே இதுவரை அமீரக அளவில் சாதனை ஏலமாக நீடிக்கிறது.


VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.