Breaking News
recent

ரூ.259 க்கு 10 ஜிபி டேட்டா: ஏர்டெல்லின் 'அடடே' அறிவிப்பு.!


புதிதாக 4 ஜி மொபைல் வாங்கும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 259 ரூபாய் கட்டணத்தில் 10 ஜிபி டேட்டாவை வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோவின் வருகையால் ஆடிப்போயுள்ள ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை தக்க வைக்க நாள்தோறும் புதிய திட்டங்கள் பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் நேற்று ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி புதிதாக 4 ஜி மொபைல் வாங்கும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு 259 ரூபாய் கட்டணத்தில் 10 ஜிபி டேட்டாவை வழங்கபப்டும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

4ஜி மொபைல் வைத்திருப்பவர்கள் 259 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் அவர்கள் அக்கவுண்டில் 1 ஜிபி கிரெடிட் ஆகும். மீதமுள்ள 9 ஜிபியை மை ஏர்டெல் ஆப் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். 

இந்த டேட்டா 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த சேவையை மூன்று மாதங்கள் வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஏர்டெல் தெரிவித்துள்ளது.

தற்பொழுது வரைகுஜராத், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் மட்டும்தான் இந்த சேவை வழங்கப்பட்டு  வந்தது. தற்போது இந்த சேவையானது நாடு முழுவதும் வழங்கப்பட உள்ளதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.