Breaking News
recent

துபாயில் 'எக்ஸ்போ 2020' நடைபெறும் இடம் வரை மெட்ரோ ரயில் சேவை விரிவுபடுத்த திட்டம்.!


துபையில் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு சர்வதேச எக்ஸ்போ நடைபெறவுள்ள நிலையில் அதனையொட்டி பல்வேறு வளர்ச்சிப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது துபையின் முக்கிய போக்குவரத்து சாதனமாக மாறியுள்ள மெட்ரோ ரயில் இயக்கத்தை இன்னும் 15 கி.மீ தூரத்திற்கு விரிவுபடுத்திட துபை போக்குவரத்துக் கழகம் ஃபிரான்ஸ் நாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

மேற்படி ஒப்பந்தப்படி 2019 ஆம் ஆண்டு சோதனை ஓட்டங்கள் துவங்கி, 2020 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் தேதி முதல் புதிய மெட்ரோ தடம் போக்குவரத்திற்கு திறக்கப்படும், அதாவது எக்ஸ்போ 2020 துவங்கும் 5 மாதங்களுக்கு முன்.

7 மெட்ரோ நிலையங்களில் 5 மேலெழுந்த நிலையிலும் 2 பூமிக்கு கீழும் அமையவுள்ளதால் 11.8 கி.மீ தடம் மேலெழுந்த நிலையிலும் 3.2 கி.மீ பூமிக்கு அடியிலும் அமைக்கப்படவுள்ளன.

ரெட் லைனில் உள்ள அல் நகீல் ஹார்பர் அன்ட் டவர் மெட்ரோ நிலையத்தை சந்திப்பு நிலையமாகவும் (Transfer Station) எக்ஸ்போ சைட் ஸ்டேஷனை முடிவு நிலையமாகவும் கொண்டுள்ள இத்திட்டத்தின் கீழ் கார்டன்ஸ், டிஸ்கவரி கார்டன்ஸ், அல் புர்ஜான், ஜூமைரா கோல்டு எஸ்டேட்ஸ் மற்றும் துபை இன்வெஸ்ட்மென்ட் பார்க் ஆகிய மெட்ரோ நிலையங்களுக்கிடையே 15 மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

மேலும், தற்போது கிரீன் லைனில் தினமும் இயக்கப்படும் 79 ரயில்களுடன் கூடுதலாக 35 புதிய மெட்ரோ ரயில்களும் இயக்கப்படும்.

Source: Gulf News
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.