Breaking News
recent

2017 ஜனவரி 1 முதல் செல்போன்களில் `அபாய பட்டன்’.!


பெண்களின் வேதனையை போக்கும் நோக்கில், 2017 ஜனவரி 1 முதல் அனைத்து செல்போன்களில் `அபாய பட்டன்’ அறிமுகம் செய்யப்பட உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் டெல்லி காவல் துறை தெரிவித்தது. 

பெண்கள் இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க செல்போன்களில் `அபாய பட்டனை’ அறிமுகம் செய்ய உள்ளதாக டெல்லி காவல் துறை தெரிவித்துள்ளது. 

டெல்லி உயர் நீதிமன்ற அமர்வு நீதிபதி பி.டி.அகமது, நீதிபதி அசுதோஸ் குமார் முன்பு தலைநகர காவல் துறை அளித்த உறுதிச் சான்றில் கூறப்பட்டுள்ளதாவது: 

2017 ஜனவரி 1 முதல் செல்போன்களில் `அபாய பட்டன்’ அறிமுகம் செய்ய உள்ேளாம். தற்போது உள்ள 100, 101, 102 போன்ற அவசர அழைப்பு எண்களை எடுத்து விட்டு ஒரே அவசர உதவி எண்ணாக 112ஐ அறிமுகம் செய்ய உள்ளோம்.

 1 ஆண்டுக்குள் தற்போது உள்ள அனைத்து அவசர அழைப்பு எண்களும் இரண்டாம் நிலை எண்களாக மாற்றப்படும். 112 எண் அறிமுகம் செய்யப்படும். 

உலக அளவில் முக்கிய மாநகரங்களில் மற்ற காவல் துறையினர் அவசரமான சூழ்நிலைகளில் எப்படி செயல்படுவது என்பது குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற விசாரணையின் போது, குற்றம் நடைபெற்ற இடங்களில் இருந்து சேகரிக்கப்படும்  உடல் அல்லது ரசாயன மாதிரிகள் காவல் நிலைய சேமிப்பு கூடங்களில் அறுவெறுத்தக்க வகையில் வைக்கப்படுகிறது.

என்று டெல்லி மாநில சட்ட சேவை அதிகார உறுப்பினர் செயலாளர் தர்மேஷ் சர்மா தெரிவித்தார். இதனையடுத்து, குற்ற விசாரணை நடைமுறைகளை காவல் துறையினர் முறையாக செயல்படுத்துகின்றனரா என்பதை அனைத்து காவல் நிலையங்களிலும் ஆய்வு செய்யும் படி சர்மாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.