Breaking News
recent

கேரளாவில் அமீரகத்தின் 2வது துணை தூதரகம் இன்று திறப்பு.!


டெல்லியில் செயல்படும் அமீரக தூதரகத்துடன் கூடுதலாக மும்பையிலும் அமீரக துணைத் தூதரகம் பல்லாண்டுகளாக செயல்பட்டு வருகின்றது. 

இந்நிலையில் கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் 'மனக்காடு' சந்திப்பில் (Manacaud Junction) இந்தியாவுக்கான 2வது துணைத் தூதரகம் இன்று திறக்கப்பட்டது.

இந்த 2வது துணைத் தூதரகத்தின் (Consulate)  துணைத் தூதராக (Consul General) ஜமால் அல் ஜாபி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். 

மேலும் திறப்பு விழா நிகழ்வின் போது கேரள கவர்னர் சதாசிவம், முதலமைச்சர் பினராயி விஜயன் உட்பட இந்திய, அமீரக முக்கிய புள்ளிகள் சமூகமளித்திருந்தனர்.

இத்துணை தூதரகம் திறக்கப்பட்டதன் மூலம் கேரளா மற்றும் தென்னிந்தியாவுக்காக விசா நடைமுறைகள் மிக எளிதாகுமென்றும், இத்துணை தூதரகத்தின் வழியாக விசா பெறுபவர்கள் எத்தகைய சிரமங்களுமின்றி ஈ-கேட் (e-gate) வழியாக அமீரகத்தினுள் பிரவேசிக்க முடியும்.

இந்நிலையில், அபுதாபியில் இந்திய தூதரகமும் துபையில் துணைத் தூதரகமும் செயல்பட்டு வரும் நிலையில் 2வது துணைத் தூதரகம் ஒன்றை அமீரகத்தில் கூடுதலாக திறந்திட மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Source: Emirates 247
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.