Breaking News
recent

துருக்கி பள்ளிவாசலுக்கு 1936 க்கு பின், நிரந்தர இமாம் நியமனம் - 2 வேளை பாங்கும் நிறுத்தம்.!


துருக்கியின் ஸ்தன்பூல் நகரில் இருக்கும் பிரபல ஹேகியா சோபியா பள்ளிவாசலுக்கு 1936ஆம் ஆண்டுக்கு பின்னர் நிரந்தர இமாம் ஒருவரை நியமிக்க துருக்கி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

ஹேகியா சொபியாவின் நான்கு மினாரத்களிலும் நியமிக்கப்படும் இமாமினால் ஐந்து வேளை தொழுகையும் நடத்தப்படும் என்று துருக்கி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னர் இங்கு இரண்டு வேளை தொழுகையே நடத்தப்பட்டது.

கொன்ஸ்டான்டினோபில் கால கட்டுமானமான ஹேகியா சோபியா பைசான்திய பேரரசில் ஓர்தொடொக்ஸ் தேவாலயமாக இருந்து 1453இல் உஸ்மானி பேரரசின் ஆக்கிரமிப்பை அடுத்து பள்ளிவாசலாக மாற்றப்பட்டது. 1931 ஆம் ஆண்டு வரை பள்ளிவாசலாக இயங்கிய இந்த கட்டடம் துருக்கியின் மதச்சார்பற்ற அரசினால் 1935இல் நுதனசாலையாக மாற்றப்பட்டது.

எனினும் 2010ஆம் ஆண்டு தொடக்கம் ஹேகியா சொபியாவை மீண்டும் பள்ளிவாசலாக மாற்றும் கோரிக்கை வலுத்த நிலையில் 2015 தொடக்க வரலாற்று முக்கியம் வாய்ந்த அந்த கட்டடத்தை பள்ளிவாசலாக மாற்றும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டது.

கடந்த ஜுலையில் 85 ஆண்டுகளில் முதல்முறையாக ஹேகியா சொபியாவில் குர்ஆன் ஒலிக்கப்பட்டது. துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் நாட்டின் மதச்சார்பற்ற கொள்கைக்கு எதிராக இஸ்லாமிய பெறுமானங்களை புகுத்தி வருவதாக அவருக்கு எதிரானவர்கள் விமர்சித்து வருகின்றனர். 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.