Breaking News
recent

திருவனந்தபுரத்திலிருந்து துபாய் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திடீர் பழுது: 152 பயணிகளுடன் பத்திரமாக தரையிறக்கம்.!


நேற்று சனிக்கிழமை மாலை திருவனந்தபுரத்திலிருந்து 152 பயணிகள் மற்றும் 6 விமான சிப்பந்திகளுடன் துபாய் நாட்டிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 'ஆட்டோ பைலட்' எனும் தானியங்கி கருவி இயங்காததால் மீண்டும் இரவு சுமார் 8.20 மணியளவில் திருவனந்தபுர விமான நிலையத்திலேயே தரையிறங்கியது.

மொத்தம் 158 பேர் பயணித்த அந்த விமானத்தில் ஏற்பட்ட கோளாரை விமானி கண்டுபிடிக்கும் போது ஏற்கனவே அது தன் பயணத்தின் பாதி தூரத்திற்கு மேல் கடந்திருந்தது.

பயணிகள் அனைவரும் பத்திரமாக மாற்று விமானத்தில் துபாய்க்கு அனுப்பி வைக்கப்படுவர் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

Source: Gulf News
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.