Breaking News
recent

வறுமை மாணவர்களுக்கு 10975kg எடை கொண்ட பாடசாலை உபகரணங்களை: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உலக சாதனை.!


சார்டட் எக்கௌண்டன்டாக பணிபுரியும் கிருஷ்ண மூர்த்தி என்பவரால் 2009ம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆரம்பிக்கப்பட்ட அறக்கட்டளை நிறுவனம்தான் ''education4all'' வறுமை நிறைந்த நாடுகளில் வாழும் மாணவர்களின் கல்விக்கு கை கொடுக்கும் முகமாவே இவர் இந்த அறக்கட்டளை நிறுவனத்தை ஆரம்பித்து கடந்த ஏழு வருடங்களாக உதவி செய்து கொண்டிருக்கிறார். 

இந்த உதவிச்செயற்பாடுகளின் ஒரு அங்கமாக இவரின் அறக்கட்டளை நிறுவனம், டுபாய் சேம்பர் சென்டர், அல் தியாபா பாடசாலை ஆகிய மூன்றும் இணைந்து எமிரேட்ஸ் ரெட் கிரசண்டின் அனுசரணையுடன் பாடசாலை உபகரணங்களை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தன கடந்த 13ம் திகதி மாலை 6.12 க்கு ஆரம்பித்த சேகரிப்பு பணி 14ம் திகதி மாலை 5.20 உடன் நிறைவு பெற்றது இந்த சேகரிப்பு பணியில் 4960 கிலோ புத்தகங்கள் அடங்கலாக மொத்தம் 10975 கிலோ பாடசாலை உபகரணங்கள் சேகரிக்கப்பட்டு அது இன்று எமிரேட்ஸ் ரெட் கிரசன்டிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

ஒரு நாளில் அதிக பாடசாலை உபகரணங்கள் சேகரிக்கப்பட்ட உலக சாதனை நிகழ்வாகவும் இது பதிவு செய்யப்பட்டது சவூதி அரேபியாவின் மக்கா நகரில் உள்ள நமா அறக்கட்டளை நிறுவனம் சேகரித்திருந்த 4571 கிலோ உபகரணங்களே இதுவரையில் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்திருந்தது.

சேகரிக்கப்பட்ட இந்த பாடசாலை உபகரணங்கள் அனைத்தும் ஈராக், ஜோர்தான், யேமன், ஆகிய நாடுகளில் எமிரேட்ஸ் ரெட் கிரசன்ட் பொறுப்பேற்று நடத்தும் அகதி முகாம்களில் உள்ள மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.