Breaking News
recent

இட்லி, தோசைக்கு மவுசு தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. துபாய்க்கு ஏற்றுமதியாகும் 100 லிட்டர் கிரைண்டர்.!


இந்திய பாரம்பரிய உணவு வகையில் முக்கிய இடத்தில் பிடித்திருப்பது இட்லி, தோசையாகும். குறிப்பாக தமிழகத்தில் அரிசி மாவால் தயாரிக்கப்படும் உணவு பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

அரிசி மாவு தயாரிக்கும் கிரைண்டர் கோவையில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதியாகிறது.

இட்லி, தோசைக்கு மவுசு தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. குறிப்பாக துபாய், அமெரிக்க உள்ளிட்ட வெளிநாட்டு மக்களிடையே இதன் தேவை அதிகரித்துள்ளது.

கோவையில் 5 லிட்டர் முதல் 40 லிட்டர் கொள்ளளவு கிரைண்டர்கள் தயாரிக்கப்படுகின்றன. தற்போது வெளிநாடு வாழ் இந்தியரான பிரதீப் சீனிவாசன் என்பவர் நான்கு 100 லிட்டர் கிரைண்டருக்கு ஆர்டர் கொடுத்துள்ளார்.

இது உணவுக்காக தயாராகும் உலகிலேயே மிக பெரிய கிரைண்டர் ஆகும். துபாய், அமெரிக்கா மக்கள் இட்லி, தோசையை அதிகம் விரும்புகிறார்கள். 

100 லிட்டர் கிரைண்டர் தயாரிக்க இனிமேல் தான் டிசைன் செய்யவேண்டும் என்று கிரைண்டனர் உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் 4 கிரைண்டர்களில் 2 துபாய்க்கும், 2 பெங்களூருக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் விலை ரூ.5 லட்சம் ஆகும் என்று தயாரிப்பாளர் கூறினார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.