Breaking News
recent

அஜ்மானில் 1 வாரத்தில் 222 சைக்கிள்கள் பிடிபட்டன.!


பொதுவாக அமீரகத்தில் சைக்கிள் ஒட்டிகள் பெரியளவில் சாலை விதிமுறைகளை மதிப்பவர்கள் அல்ல மேலும் போக்குவரத்து காவலர்களும் அவர்களிடம் அதிக கெடுபிடி செய்யாததால் அவர்கள் தனிக்காட்டு ராஜாவாக வலம் வருகின்றனர்.

 அதுபோல் சைக்கிளில் செல்லும் போது வாகனத்தில் அடிபட்டால் இன்ஸ்ஷூரன்ஸ் ஏதும் கிடைக்காது என்பதும் சைக்கிள் ஓட்டுவதன் ஆபத்தை விளக்க போதுமானது.

தாறுமாறாக செல்லும் சைக்கிள் ஓட்டிகளால் விபத்துக்கள் அதிகமானதை தொடர்ந்து அஜ்மான் போக்குவரத்து காவல்துறை பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவுறுத்தி வருகின்றனர், மீறுவோரின் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

சைக்கிள் ஓட்டிகள் முறையான போக்குவரத்து சட்டங்களை கடைபிடிக்க வேண்டும், வாகனங்கள் வரும் அதேவழியில் எதிர்த்து செல்லக்கூடாது.

சைக்கிள் ஓட்டிகளுக்கான ஹெல்மேட் அணிந்திருக்க வேண்டும்.

இரவு வேளைகளில் சைக்கிள் ஓட்டுவோர், போக்குவரத்து போலீஸார் இலவசமாக தரும் மின்னும் மேலாடையை அணிந்திருக்க வேண்டும்.

அதேவேளை வாகன ஒட்டிகளும் சைக்கிள் ஓட்டிகள் குறித்தும், சைக்கிளில் விளையாடும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் அதிக கவனமெடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 1 வார தொடர் நடவடிக்கைகளின் விளைவாக. மேற்படி போக்குவரத்து ஒழுங்குகளை மதிக்காத சைக்கிள் ஓட்டிகளின் 222 சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன, அதிரடி தொடரும்...



Source: Khaleej Times
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.