Breaking News
recent

விவசாயம் பண்ணுங்க ! கரும்பு தின்ன கூலி தரும் துபாய்.!


துபாய் இயற்கையில் விவசாயத்திற்கு லாயக்கற்ற பாலைவன பூமி, நீர்வளமோ பருவ மழைகளோ கிடையவே கிடையாது என்பதால் ஆறுகளும் பயாவில்லை அணைக்கட்ட வேண்டிய அவசியமுமில்லை என்பதால் பக்கத்து மாநிலத்துடனோ அல்லது பக்கத்து நாட்டுடனோ தண்ணீர் பங்கீடு பஞ்சாயத்துக்கள் சுத்தமாக இல்லை என்றபோதும் அக்கறையான நீர் மேலாண்மையால் தண்ணீர் பஞ்சம் எனும் சொல்லுக்கே இங்கு வறட்சி தான்.

சரி விஷயத்திற்கு வருவோம்...
விவசாயத்தைப் பற்றி இயற்கையாக கவலைப்படத் தேவையில்லாத இந்த நாட்டில், விரல் சொடுக்கினால் உணவு தானியங்களும் காய்கறிகளும் பழங்களும் வந்து குவியும் இந்நாட்டில் இயற்கை விவசாயத்தை, மாடி தோட்ட விவசாயத்தை ஊக்குவிக்கின்றார்கள் என்றால் நம்ப முடிகிறதா!

ஆம்! சுமார் 30 சதவிகிதம் உணவுகள் வீணடிக்கப்படுவதாக கணக்கிடப்படும் துபையில் ஒரு விவசாய பொருளை விளைவிக்க எத்தனை சிரமங்கள் உள்ளன என்பதை அனுபவபூர்வமாகவும் உணரவும், இளைய சமுதாயத்திற்கு விவசாயம் தொடர்பான கல்வியை வழங்கவும், சத்தான, பூச்சி மருந்துகள் இல்லாத உணவை தாமே உற்பத்தி செய்து உண்பதை ஊக்குவிக்கவும் கடந்தாண்டு இத்திட்டம் ஆரம்பம் செய்யப்பட்டு தற்போது இரண்டாவது ஆண்டாக தொடர்கிறது.

இந்த வருடம் பொதுமக்கள், பள்ளிக்கூடங்கள், அலுவலகங்கள் மற்றும் மாற்றுத் திறனாளி மையங்கள் என 500க்கு மேற்பட்டோர் ஆர்வத்துடன் பெயர்களை பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு இயற்கை விவசாய முறை, இயற்கை உரம், சொட்டு நீர் பாசனம், விதைக்கும் முறை, செங்குத்தான இடங்களில் பயிர் செய்யும் முறை என அனைத்தை இலவசமாக கற்றுத்தருகின்றனர்.

இந்த இயற்கை விவசாயத்திற்கான இலவச வாராந்திர பயிற்சிகள் எதிர்வரும் அக்டோபர் மாதம் முதல் நவம்பர் வரை சனிக்கிழமைகளில் 'டெஸர்ட் க்ரூப் நர்சரி' நிறுவனத்தின் அல் கவானீஜ் விவசாய பண்ணையில் நடைபெறும்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை இந்தத் திட்டத்தின் கீழ் வெள்ளரி, தக்காளி, கேரட், மிளகாய், புதினா, மல்லி, கீரை வகைகள் மற்றும் மருத்துவ குணமுடைய பயிர்கள் என விளைவித்து அதை இந்தத்திட்டத்திற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள சமூக ஊடகங்களிலும் முகநூலிலும் அதன் புகைப்படங்களை பதிந்தால் விவசாய நிபுணர்கள் நேரில் ஆய்வு செய்து அந்த காய்கறிகளை விளைவித்தவர்களுக்கு பரிசுகளை வழங்குவார்கள்.

மேலும், எதிர்வரும் அக்டோபர் 14 ஆம் தேதி அல் ஜபீல் பூங்காவில், பெரிய தொட்டிகளில் அழகு செடிகளை வளர்ப்பதற்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.

அனைவருக்கும் பொதுவான இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால் தாராளமாக கீழ்க்காணும் இணைய தளத்தை விஜயம் செய்யலாம்.

Grow Your Food Campaign details

Registration: Through www.growyourfood.ae

Categories: Villas, apartments, schools, offices, special need centres

Workshops: On every Saturday in October and November at Dubai Desert Group’s farm in Al Khawaneej

Contest: From December to February
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.