Breaking News
recent

முஸ்லிம்களுக்கு அனுமதி மறுத்த ஃபிரான்ஸ் உணவகம்.!


ஃபிரான்ஸ் நாட்டில் உள்ள Le Cenacle உணவகத்தின் உரிமையாளர் முஸ்லிம்களுக்கு அந்த உணவகத்தில் அனுமதி இல்லை என்றும் அனைத்து முஸ்லிம்களும் தீவிரவாதிகள் என்றும் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் அதிகளவிலான முஸ்லிம்கள் வசிக்கும் நாடு ஃபிரான்ஸ் ஆகும். தற்போது ஐரோப்பிய நாடுகளில் அடுத்தது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களினாலும் ஊடகங்கள் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக தொடர்ச்சியாக சித்தரிப்பதாலும் அங்கு இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்து பரவலாகி வருகிறது. 

குறிப்பாக ஃபிரான்சில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களுக்கு பிறகு இஸ்லாமிய எதிர்ப்பு சிந்தனை அதிகரித்துள்ளது.

 இதன் விளைவாகவே முஸ்லிம் பெண்கள் தங்கள் உடலை மறைக்கும் உரிமையை கூட மறுத்து புர்கினிக்கு எதிராக உத்தரவு பிறப்பித்திருந்தது ஃபிரான்ஸ் அரசு.

இது போன்ற முஸ்லிம் விரோத நிகழ்வுகளில் அடுத்தக் கட்டமாக உணவகம் ஒன்றிற்குள் முஸ்லிம்கள் வருவதை மறுத்திருக்கிறார் அதன் உரிமையாளர். 

அவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டவர்களுக்குமான உரையாடலை ஒரு பெண் படம் பிடித்துள்ளதாக தெரிகிறது. இந்த வீடியோ வைரலாகவே அம்மனிதர் தற்போது மன்னிப்புக் கேட்டுள்ளார்.

தனது இந்த செயலுக்காக கடந்த ஞாயிற்று கிழமை அந்த உணவகம் முன் கூடிய கூட்டத்திடம் மன்னிப்பு கேட்டுள்ள அவர் சம்பவம் நடந்த அந்நாளில் நிகழ்வுக்கள் தனது கட்டுப்பாட்டை மீறி சென்றுவிட்டது என்று கூறியுள்ளார். 

சமீபத்திய புர்கினி குறித்த சர்ச்சையினால் தான் அவ்வாறு நடந்து கொண்டதாகவும் இன்னும் தனது நெருங்கிய நண்பர் ஒருவரை கடந்த நவம்பர் மாதம் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பலி கொடுத்ததாகவும் அதனால் தான் அவர் அவ்வாறு நடந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.