Breaking News
recent

ஹஜ் பயணிகளுக்கான புதிய ஆப் (APP)அறிமுகம்.!


ஹஜ் யாத்ரீர்கர்கள் ஹஜ்
செய்யுமிடத்தில் தங்கள் இருப்பிடத்தை இலகுவாக கண்டுபிடிக்க புதிய 'அப்ளிகேஷன்' (APP) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியா ஃபெடர்னிட்டி ஃபாரம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த 'ஆப் '(APP) மிகவும் இலகுவானது.

 இதனை ஒரு முறை ஆண்ட்ராய்ட் போன் வசதியுள்ளவர்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் https://play.google.com/store/apps/details…
என்ற இணைப்பில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

இதில் மக்கா, மற்றும் ஹாஜிகள் தங்குமிடமான அஜீஸிய்யா மற்றும் ஹஜ் செய்யுமிடமான மினா ஆகிய பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன.

ஹாஜிகள் தங்கள் இருப்பிடத்தை விட்டு ஒரு வேளை இடம் மாறி சென்றுவிட்டால், FROM என்ற காலத்தில் தங்கள் தற்போது நிற்கின்ற இருப்பிடத்தின் 'டெண்ட் எண்' அல்லது கூடாரத்தின் எண் மற்றும் பகுதி எண்ணையும், TO என்ற காலத்தில் தமது இருப்பிடத்தின் டெண்ட் எண் கொடுத்தால் போதுமானது இந்த ஆப் இலகுவாக ஹஜ் யாத்ரீகர்களுக்கு வழி காட்டிவிடும். மேலும் உணவகங்கள்,கூடாரங்கள்,மருத்துவமனைகள்,பள்ளிவாசல்கள் ஆகியவற்றையும் இந்த ஆப் மூலம் இலகுவாக கண்டுபிடித்துவிடலாம்.

இதனை ஒரு முறை டவுன்லோட் செய்துவிட்டால் இதனை உபயோகிக்க இணைய வசதி தேவையில்லை.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.