Breaking News
recent

சவூதியில் வேலையின்றி தவிக்கும் தொழிலாளர்களுக்கு உதவும் தனியார் நிறுவனங்கள்.!


சவூதியில் வேலையின்றியும், சம்பளமின்றியும் தவிக்கும் தொழிலாளர்களுக்கு உதவுவதற்கு ஏற்கனவே மன்னர் சல்மான் அவர்கள் உத்தரவின்படி உதவிகளும், சம்பள பாக்கிகளும் பட்டுவாடா செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், "சவூதி ஓஜர்" என்ற கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த சுமார் 2500 இந்தியத் தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வழங்கிட சுமார் 50 தனியார் நிறுவனங்கள் முன்வந்து அதன் தொடர்பான நேர்முகத் தேர்வுகளும் ரியாத் நகரில் நடந்து வருவதாக ஜெத்தாவிலுள்ள இந்திய கவுன்சுலர் ஜெனரல் முஹமது நூர் ரஹ்மான் ஷேக் அவர்கள் தெரிவித்தார்.

இதற்கிடையில், பாதிக்கப்பட்ட இந்தியத் தொழிலாளர்களின் 25 பேர் அடங்கிய முதற்குழு வரும் 18-08-2016 அன்று ஜெத்தா வழியாக புது டில்லி திரும்பவுள்ளனர்.

இந்திய தொழிலாளர்களைப் போல் பாதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் தொழிலாளர்களுக்கான உதவிகளையும், பாக்கி சம்பளத்தை பெற்றுத் தருவது போன்ற பணிகளையும் பிலிப்பைன்ஸ் தூதரக அதிகாரிகள் தலையிட்டு செய்து வருகின்றனர்.

Source: Constructionweek / Msn
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.