Breaking News
recent

சவுதியில் தவிக்கும் இந்தியர்களுக்கு தூதரகம் உணவு வழங்கியது.!


சவுதி அரேபியாவின் துறைமுக நகரமான ஜெட்டாவில் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்த இந்தியர்கள் திடீரென வேலை பறிபோயுள்ளது.

இதனால் சுமார் 800 இந்தியர்கள் 3 நாட்களாக கடுமையான உணவு தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. 

இவர்களுக்கு உதவ தூதரகம்  மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் வேலை இன்றி பட்டினியால் கிடந்த  இந்தியர்களுக்கு உணவு வழங்கப்பட்டதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக ஜெட்டாவில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தின் ட்விட்டர் பக்கத்தில், “ஷூமாய்சி, சிஸ்டன், மேக்ரோனா, சோஜக் உள்ளிட்ட 5 முகாம்களில் உள்ள  இந்தியர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. கடந்த 4 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட முயற்சி வெற்றியடைந்தது” என பதிவிடப்பட்டுள்ளது. 

இந்திய சமூகங்கள் உணவு  விநியோகிக்கும் அமைப்புடன் இணைந்து இந்த பணியை இந்திய தூதரகம் மேற்ெகாண்டுள்ளது. 

மேலும், சவுதி அரேபியாவில் தவிக்கும் இந்தியர்களை மீட்கும்  நடவடிக்கையை முடுக்கிவிடுவதற்காக இணையமைச்சர் வி.கே.சிங் விரைவில் அந்நாட்டிற்கு செல்ல உள்ளார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.