Breaking News
recent

அற்புதமான வசதியுடன் அறிமுகமாகின்றது SKYPEயின் புதிய பதிப்பு.!


வீடியோ அழைப்புக்கள் முதல் குரல்வழி அழைப்பு, கோப்புக்களை பரிமாறல், இன்ஸ்டன்ட் மெசேஜ் என பல வசதிகளுடன் அறிமுகமாகி பயனர்களின் பலத்த வரவேற்பை பெற்ற சேவையே ஸ்கைப் ஆகும்.

இன்று வாட்ஸ் அப், வைபர் என மேற்கண்ட வசதிகளைக் கொண்ட பல்வேறு அப்பிளிக்கேஷன்கள் அறிமுகம் செய்யப்பட்ட போதிலும் தொடர்ந்தும் ஸ்கைப்பிற்கு முதலிடம் உண்டு.

இப்படிப்பட்ட சேவையில் புதிய அம்சம் ஒன்றினை மைக்ரோசொப்ட் நிறுவனம் உட்புகுத்தவுள்ளது.

அதாவது இதுவரை காலமும் கோப்பு ஒன்றினை நண்பர்களுடன் பகிரும்போது அனுப்பப்படும் கோப்பினை பெறுபவர் கோப்பினை பெறுவதற்கான அனுமதியை வழங்க வேண்டும்.

அதன் பின்னரே குறித்த கோப்பு அவரின் கணணியில் தரவிறங்க ஆரம்பிக்கும்.

ஆனால் புதிய வசதியின் படி எதிர் பகுதியில் இருப்பவர் Offline இல் இருந்தாலும் அனுப்பப்படும் கோப்பு அவருடைய கணணியை சென்றடையும்.

அத்துடன் இவ்வாறு அனுப்பப்படும் கோப்பின் அளவு 300MB வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவ் வசதிகள் அனைத்தும் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள ஸ்கைப்பின் புதிய பதிப்பிலேயே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.