Breaking News
recent

சவுதி அரேபியாவில் பல தொழிற்சாலைகள் திடீர் மூடல் - வேலையிழந்தவர்களுக்கு உணவளிக்க இந்திய தூதரகம் ஏற்பாடு.!(PHOTOS)


சவுதி அரேபியாவில் ஏராளமான தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலையிழந்து, உணவின்றி தவித்து வருகின்றனர். சவுதி அரேபியா, குவைத் உள்ளிட்ட நாடுகளில் தொழிற்சாலைகள் திடீரென மூடப்பட்டதால் அங்கு பணிபுரிந்த ஏராளமான இந்தியர்கள் கடும் தவிப்பிற்குள்ளாகியுள்ளனர். 

வேலைக்காக லட்சக்கணக்கில் பணம் கடன் வாங்கி வேலைக்காக வெளிநாடு சென்றவர்கள், மீண்-டும் சொந்த நாடு திரும்புவதற்கு கூட பணம் இல்லாமல் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். 

ஆயிரக்கணக்கானோர் ஒரு வேலை உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் சவுதி அரேபயாவில் 10,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உணவு இன்றி துன்பப்படுவதாகவும், அவர்களுக்கு உணவு வழங்க இந்திய தூதரகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

உணவின்றி உள்ள சகோதரர்களுக்கு உணவளிக்குமாறு வளைகுடா நாடுகள் வாழ் இந்தியர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் சவுதி அரேபியாவிற்கு விரைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 















VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.