Breaking News
recent

விருது பெற்ற உலகின் பசுமைக் கட்டிடங்கள் [ PHOTOS ]


நவீன வசதிகளோடு பலரும் வியக்கும் விதமாக உயரக் கட்டிடங்கள் பலவும் உலகெங்கும் கட்டப்படுகின்றன. இவற்றில் வருங்காலத்தை உத்தேசித்து பல்வேறு வசதிகளோடு இயற்கைக்கு உகந்த மாதிரி கட்டுபவர்கள் மிகவும் குறைவு. அப்படி கட்டியிருந்தாலும் அவர்களைப் பற்றி நமக்குத் தெரிவிப்பது விருதுகள்தான். விருதுகளை தாம்பூலப்பை போல தராமல் தரத்தைப் பார்த்து தந்த விருதுகள் இவை.

உயரமான கட்டிடங்கள் மற்றும் நகர்ப்புற வாழிடங்களுக்கான கவுன்சில் (CTBUH), அண்மையில் தனது 15ம் ஆண்டு விழாவின்போது ‘2016ம் ஆண்டின் சிறந்த கட்டிட வடிவமைப்பு’க்கான விருதை வழங்கியது. உலகமெங்கும் உள்ள மிகச்சிறந்த கட்டிடங்களை அடையாளும் கண்டு கௌரவிக்கும் இவ்விழாவில் இந்த ஆண்டு இரண்டாவது மிகப்பெரிய கட்டிடம், பிரமிடு வடிவிலான கட்டிடம் ஆகியவையும் இடம்பெற்று விருது வாங்கின.

அமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்கா பகுதிகளைச் சேர்ந்த கட்டிடங்கள் மதிப்பீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. வெளிப்புற அழகு, கவரும் விதம் என்பது மட்டுமல்லாமல் இயற்கைக்கு உகந்த விதத்தில் உள்ளேயும் பல வசதிகள் அமைந்திருப்பதுதான் இந்தக் கட்டிடங்களில் விசேஷம். விருது பெற்ற கட்டிடங்களைப் பற்றிப் படித்து அவற்றின் சிறப்புகளை அறிந்துகொண்டால்தானே, வருங்காலக் கட்டிடங்களை மற்றவர்களைக் கவர்வதுபோல கட்டி கல்லா கட்ட முடியும்?!


ஷாங்காய் டவர்

இந்த ஷாங்காய் டவர்தான் தற்போது உலகத்திலேயே இரண்டாவது பெரிய கட்டிடமாக உள்ளது. 2.4 பில்லியன் டாலர்கள் செலவு செய்து கட்டப்பட்ட 632 மீட்டர் உயரமுள்ள இந்தக் கட்டிடம், கீழேயிருந்து மேலே வரை 120 டிகிரியில் வளைத்து முறுக்கியது போல் அமைந்து பார்ப்பவர்களை வியக்க வைக்கக்கூடியதாகும். 128 மாடிகளைக் கொண்டுள்ள இந்தக் கட்டிடமானது, 4 லட்சத்து 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது. ‘சிறந்த பசுமைக் கட்டிடம்’ என சான்று பெற்றுள்ள ஷாங்காய் டவரில் மழைநீர் சேகரிப்பு, பயன்படுத்திய நீரை மறுசுழற்சி செய்வது, 270 காற்றாடிகளின் மூலம் மின்சாரம் தயாரிப்பு உள்ளிட்டவை உண்டு.
க்யூப் ஆரஞ்ச் கட்டிடம்

மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்க நாடுகள் பிரிவில் விருது பெற்ற கட்டிடம் இது. டச்சு நாட்டு நிறுவனமான ஆரஞ்ச் ஆர்க்கிடெக்ட் உருவாக்கிய இது, லெபனான் நாட்டின் தலைநகரம் பெய்ரூட் நகரில் அமைந்துள்ளது. இந்தக் கட்டிடம் 50 மீட்டர் உயரம் கொண்டது. 14 அடுக்கு களாக 90 டிகிரி அளவில் சாய்ந்தது போல அமைத்துக் கட்டப்பட்டுள்ள இக்கட்டிடத்தில் மொத்தம் 19 சொகுசு வீடுகள் 5,600 சதுர மீட்டர் அளவில் கட்டப்பட்டுள்ளன.

வெஸ்ட் 57 பிக் கட்டிடம்

டென்மார்க் நிறுவனமான ஜார்கே இன்ஜெல்ஸ் குழுமம், தனது 57, வெஸ்ட்பிக் எனும் கட்டிடத்திற்காக விருது பெற்றுள்ளது. நியூயார்க்கின் அடையாளமாக மாறிவிட்ட பிரமிட் வடிவில் அமைந்த இக்கட்டிடம், 142.3 மீட்டர் உயரம் கொண்டுள்ளது. 80 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டுள்ள இந்தக் கட்டிடம் குறைவான நீர்ப் பயன்பாடு, மழைநீர் சேகரிப்பு, குறைவான மின்சக்தியைப் பயன்படுத்துவது என பல்வேறு திட்டங்களிலும் பாஸ் மார்க் வாங்கி விருதை தட்டிச்சென்றுள்ளது.

தி வொயிட் வால்ஸ்

பிரெஞ்ச் நிறுவனமான அடெலியர்ஸ் ஜீன் நோவல் கட்டியுள்ள கட்டிடமான திவொயிட் வால்ஸ் என்பதற்கு இன்னொரு பெயரும் உண்டு. சைப்ரஸ் டவர் என்றும் கனிவோடு அழைக்கப்படும் இது 69.6 மீட்டர் உயரம் கொண்டு நாட்டிலேயே உயரமான கட்டிடம் என்ற சாதனையை சொந்தமாக்கியுள்ளது. இக்கட்டிடத்தில் பல்வேறு காய்கறிகள் வெர்டிகல் ஃபாரஸ்ட் முறையில் விளைவிக்கப்படுகின்றன என்பதால் காற்றோட்டத்திற்குக் கவலையில்லை.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.