Breaking News
recent

ரம்ஜான் மாதத்தில் பிராத்தனை செய்கிறேன், பங்கரவாத தாக்குதலை கண்டிக்கிறேன் - மம்தா.!


வங்காளதேசத்தில் உள்ள விடுதியில் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். 

இந்த தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த மாணவி ஒருவர் பலியாகியுள்ளார். 

இந்நிலையில், வங்காளதேச பயங்கரவாத தாக்குதலுக்கு மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக மம்தா டுவிட்டரில் கூறியுள்ளதாவது:- 

வங்காளதேசத்தில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல்களை தெரிவித்து கொள்கிறேன்.

 நாங்கள் உங்களுடனே இருக்கிறோம். ரம்ஜான் புனித மாதத்தில் அனைவரும் அமைதியுடனும், நல்லிணக்கத்துடனும் வாழ பிராத்தனை செய்கிறேன். பங்கரவாத தாக்குதலை கண்டிக்கிறேன். 

தீவிரவாதத்திற்கு எல்லை கிடையாது. தீவிரவாததிற்கு மதம் கிடையாது. மனித தன்மையற்ற பயங்கரவாத செயல்களுக்கு எதிராக போராட, தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அப்போது தான் மனிதம் வெல்லும். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.