Breaking News
recent

ஆதார் எண் பதிவு செய்யவில்லை என்றால் ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைக்குமா?


நியாயவிலைக் கடைகளில் ஆதார் எண்ணை பதிவு செய்யவில்லை என்றாலும் பொதுவிநியோகத் திட்ட பொருள் தடையின்றி வழங்கப்படும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி:

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக ஸ்மார்ட் கார்டு வழங்கப்படவுள்ளது. இதற்கென உணவுப் பொருள் வழங்கல் துறை மூலம் அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் விற்பனை முனையம் என்ற சாதனம் வழங்கப்பட்டுள்ளது. 

இதில் குடும்பத் தலைவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

குடும்ப அட்டைதாரர்கள் தங்களது செல்லிடப்பேசி எண், குடும்பத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் ஆதார் அட்டை ஆகியவற்றை நியாய விலைக் கடைகளில் பதிவு செய்து கொள்ளலாம். 

ஆதார் அட்டை பதிவு செய்யாவிட்டாலும், தொடர்ந்து பொதுவிநியோகத் திட்டத்தின்கீழ் அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி வழங்கப்படும் என்றார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.