Breaking News
recent

“கோவில் திருவிழா நடத்த அனுமதிக்காவிட்டால் இஸ்லாமிய மதத்திற்கு மாறுவோம்”


நாகை மாவட்டம் கள்ளிமேடு பத்ரகாளியம்மன் கோவிலில் ஒருநாள் திருவிழா நடத்த தலித்துகள் உரிமை கோரும் விவகாரத்தில் இருதரப்பினரிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதையடுத்து, திருவிழாவை நிறுத்தி வைக்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

நாகை மாவட்டம் கள்ளிமேடு பகுதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக அப்பகுதியைச் சேர்ந்த தலித் மக்கள், திருவிழாவின்போது தங்களுக்கும் ஒருநாள் உபயம் வழங்க வேண்டுமென போராடி வருகின்றனர். 

இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளனர். இந்தாண்டு தங்களுக்கு திருவிழாவில் உபயம் வழங்காவிட்டால் இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறப்போவதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், வரும் 8-ஆம் தேதி தொடங்கி 5 நாள்கள் கோவிலில் திருவிழா நடைபெற இருந்தது. அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளின் முன்னிலையில் இரு தரப்பு மக்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

இதில் தலித் மக்களுக்கு கோவில் திருவிழாவில் உரிமை வழங்க கூறப்பட்ட ஆலோசனைகளை எதிர் தரப்பினர் ஏற்க மறுத்தனர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் திருவிழாவை தற்காலிகமாக நிறுத்திவைத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.