Breaking News
recent

சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் விட்டுச் சென்ற பொருட்களை திரும்ப பெறுவதற்கு புதிய வசதி அறிமுகம்.!


பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் தினமும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு பயணிகள் வந்து செல்கின்றனர். 

அவர்கள் விமான நிலைய சோதனைக்கு பின் சோதனைக்கு உட்படுத்த பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களை மறந்து அங்கேயே விட்டு செல்கின்றனர். அவ்வாறு சிஐஎஸ்எப் போலீசாரால் மீட்கப்பட்ட பொருட்கள் தற்போது ரூ.2 கோடி மதிப்பை எட்டியுள்ளது என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

பெரும்பாலும் பயணிகள் மொபைல் போன்களை விமான நிலையத்தில் விட்டு செல்வது வழக்கம். ஆனால், இந்த வருடம் துவக்கம் முதல் கடந்த மே மாதம் வரை 895 செல்போன்கள், 485 லேப்டாப்கள், 160 கேமராக்கள், வாட்ச்கள், பணப்பைகள், வெளிநாடு மற்றும் உள்நாட்டு கரன்சி, நகைகள், 400 ஜாக்கெட்கள், பேக் என ரூ.2.37 கோடி மதிப்பிலான 2,282 பொருட்களை விட்டு சென்றுள்ளனர். 

இதில் ரூ.91 லட்சம் மதிப்பிலான பொருட்களை அந்தந்த பயணிகள் திரும்ப பெற்று சென்றுள்ளனர். மீதமுள்ள ரூ.1.25 கோடி மதிப்பு பொருட்கள் விமான நிலைய அதிகாரிகளின் பொறுப்பில் உள்ளது. விமான நிலையத்தில் உள்ள உடமைக்கு சொந்தக்காரர் என்பதற்கான உரிய ஆவணத்தை சமர்பித்து பொருட்களை பெற்று செல்லும்படி விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். 


தற்போது காணாமல் போன பொருட்களை பயணிகள் பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக சிஐஎஸ்எப் அதிகாரிகள் உலகமெங்கும் உள்ள 59 பயணிகள் விமான நிலையங்களில் கணிப்பொறி சேவையை தொடங்கியுள்ளனர். 

விமான நிலையத்தில் பொருட்களை விட்டு சென்றோம் என்று பயணிகள் நினைத்தால் www.cisf.nic.in வெப்சைட்டில் பதிவு செய்து, அதில் குறிப்பிட்டுள்ள பொருட்களில் தனது பொருள் உள்ளதா என்பதை சரிபார்த்து, பின்னர் அப்பொருளை பெற்றுக் கொள்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.