Breaking News
recent

துபாய் போலீஸாரின் மனிதநேயம்.!


துபாய் நாட்டிற்கு சுற்றுலா வந்த சீனா பயணி ஒருவர் விமான நிலையத்திலிருந்து நேராக தங்கும் விடுதிக்கு சென்றுள்ளார். அங்கு சில மணி நேர ஒய்வுக்கு பின் அருகில் உள்ள இடங்களை காண தனியாக சென்றுள்ளார். 

பின்னர் மீண்டும் தங்கும் விடுதிக்கு செல்லும் பாதை மறந்து விடவே. அங்கு விழி பிதுங்கி நின்றவரிடம் துபாய் போலீஸ் இவருக்கு உதவ முன்வந்தது. இவரிடம் எங்கு தங்கி இருக்கிறிர்கள் ? உங்களது தங்கும் விடுதியின் பெயர் என்ன எனக் கேட்டனர். 

இவரால் தான் தங்கி இருக்கும் இடத்தின் சரியான முகவரியை கூற முடியவில்லை. உடனே இவரது விசாவை பார்வையிட்டவர்கள் அதில் உள்ள ஸ்பான்சர் விவரங்களை பெற்று சரியான முகவரியை கண்டறிந்தனர். 

பின்னர் சீனப் பயணியை அவர் தங்கிருக்கும் விடுதிக்கு பத்திரமாக அனுப்பி வைத்தனர். இக்கட்டான நேரத்தில் தானாக முன்வந்து உதவிய துபாய் போலீஸாரின் மனித நேயப்பணியை சீனப் பயணி மெய் சிலிர்க்க பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

இதே போல் துபாயில் கடந்த 2015 ஆண்டு ஜூன் மாதத்தில் நிகழ்ந்த மற்றொரு மனிதநேயப் பணி பலரை நெகிழ வைத்தது...

துபாய் நாட்டில் டிரக் வாகனம் ஒட்டி வருபவர் முஹம்மது மசூத். இவர் வாகனம் நெருக்கடி மிகுந்த பகுதியில் தனது டிரக் வாகனத்தை ஓட்டிச்சென்றுள்ளார். 

அப்பொழுது வாகனத்தில் திடீர் பழுது ஏற்பட்டு நகர முடியாமல் சாலையில் சிக்கி நின்றது. வாகன ஓட்டுனர் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த போது இதே சாலையில் ரோந்தில் ஈடுபட்ட துபாய் போலீஸ் ஒருவர் நகர முடியாமல் சாலையில் நின்றுகொண்டிருந்த வாகனத்திற்கு உதவ முன்வந்தார்.

இதையடுத்து வாகனத்தின் பின்புறமாக சென்று தனது முழு பலத்தையும் வெளிப்படுத்தி வாகனத்தை தனது இரு கரங்களால் தள்ளி அப்புறப்படுத்த உதவினார்.


இதன் பிறகு வாகனம் நெருக்கடியான பகுதியிலிருந்து பார்க்கிங் பகுதிக்கு நகர்ந்து சென்றது. இக்கட்டான நேரத்தில் தானாக முன்வந்து உதவும் துபாய் போலீஸாரின் மனிதநேயப் பணியை டிரக் வாகன ஓட்டுனர் மற்றும் இதே சாலையில் பயணித்த பலர் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.