Breaking News
recent

வாட்ஸ்அப்,ஃபேஸ்புக் பயனாளிகள் சிந்தனைக்கு.!


பிரிக்க முடியாதது எதுவோ என்று கேள்வி கேட்டால் வாட்ஸ்அப்பும் வதந்திகளும், ஃபேஸ்புக்கும் பொய்ச்செய்திகளும் என்ற அளவுக்கு நிலைமை செல்கிறது. இந்நிலையில் வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் பயனாளிகள் சிந்தனைக்கு சில கருத்துகள்:
1). ஆராயாமல் எந்த செய்தியும் பரப்பாதீர்கள். அது பாவமாகும்.
ஒரு செய்தியை/தகவலை ஷேர் செய்யும் முன் அது உண்மையா என உறுதி செய்துக் கொண்டு பகிர்வது அவசியம். அப்படி உறுதி செய்ய முடியாத நிலையில் குறைந்தபட்சம் இது உண்மையா என்னும் கேள்விக்குறியுடன் அதை பகிருங்கள். இதன் மூலம் உறுதி செய்யப்படாத செய்திகளை பலருக்கும் ஷேர் செய்வது தவிர்க்கப்படும்.
2).தனிப்பட்டவர்களின் படத்தை, அதுவும் பெண்களின் படத்தை, அவர்களின் அனுமதியில்லாமல் ஒருபோதும் பரப்பாதீர்கள். அப்பெண்கள் நெருங்கிய உறவினராக இருந்தாலுஞ் சரியே. உரியவரின் அனுமதியின்றி ஒருவரின் படத்தைப் பரப்புவது மகாபாவமாகும்.
3). இணைய இதழ்களை மட்டுமே நம்பி எந்தச் செய்தியும் பரப்பாதீர்கள். அச்சு ஊடகத்தில் வராத செய்திகள் இக்காலக்கட்டத்தில் 90% உண்மையில்லாதவையே.
4). அங்கத ஊடகங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். பெரும்பாலும் இவை இணைய ஊடகங்கள். வேண்டுமென்றே உண்மைக்கு மாறான செய்திகளை உண்மையைப் போன்றே வெளியிட்டு மக்களை முட்டாளாக்குவார்கள்.
5). கிராஃபிக்ஸ், ஃபோட்டோஷாப் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். குறைந்த பட்சம், அவற்றை அடையாளம் காணத் தெரிந்து கொள்ளுங்கள்.இவை நீங்கள் ஏமாறாமலிருக்க உதவும்.social media
6).உங்களை, உங்கள் இனத்தை, மொழியை, மதத்தை, அமைப்பை கேலிசெய்யும் ஊடகங்களின் வலையில் சிக்காதீர்கள். மேற்கண்ட கருத்துகளை கவனத்தில் வையுங்கள். ஆதரவுப் பதிவு போல கேலி செய்யும் பதிவுகளை இனங்காண முயலுங்கள்.
7). பரப்புவதற்கு மிகவும் உகந்தது உண்மையான செய்திகளே, பரபரப்பான செய்திகளல்ல என்று உணருங்கள்.
8). இதை உடனே பரப்புங்கள் என்று வருகிற செய்திகளை உடனே அழியுங்கள். அவை 99% பொய்யாகும்.
9). இந்தப் பதிவை பரப்பினால் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் பாதிக்கப்பட்டவருக்குப் பணம் கொடுக்கும் என்று நம் இரக்கத்தை வேண்டுகிற அரக்கர்களுக்கு இணங்காதீர்கள். அவை எல்லாம் பொய்.
10). ஊடகம் என்று வரும்போது உணர்ச்சி வசப்படாதீர்கள். தர்க்க நியாயத்தை யோசியுங்கள்.
(காட்டாக, ATM ரிவர்ஸ் பின் நம்பர் செய்தி)
11). இரத்தம் தேவை, உதவி தேவை என்று வருகிற செய்திகளை தேதி போட்டு அனுப்புங்கள். இல்லாவிட்டால் ரெண்டு வருஷம் கழித்து உங்களுக்கே திரும்ப வரும்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.