Breaking News
recent

இதுதான் இஸ்லாம்.!


துபாயைச் சேர்ந்த அரபு தொழிலதிபர் ஷேக் ஷைத் பின் ஷைய்ஃப் சில மாதங்களுக்கு முன்பு தனது நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ராதாகிருஷ்ணன் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கேரளாவில் உள்ள எடப்பாள் கிராமத்திற்கு வந்திருந்தார்.

காரில் பயணிக்கும் போது அந்த கிராமத்தில் பெண்கள் கையிலும், தலையிலும் குடத்தை சுமந்து கொண்டு தண்ணீருக்கு அலைவதும், குழாயடிகளில் நீண்ட வரிசையில் காத்திருப்பதையும் பார்த்து விசாரித்த அரபு ஷேக் எடப்பாள் கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறை உள்ளதை தெரிந்து கொண்டார்.

எடப்பாள் கிராம மக்களின் தாகம் தணிக்கும் முயற்சியில் உதவும் வகையில் நான்கு இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, மின் மோட்டார் மற்றும் தண்ணீர் தொட்டிகள் அமைத்து கொடுத்ததோடு தனது குடும்பத்துடன் நேரடியாக வந்து திட்டத்தை துவக்கி வைத்தார்.

கடல் கடந்த தேசம் கடந்த மனிதநேயம், இதுதான் இஸ்லாம்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.