Breaking News
recent

காஷ்மீரில் வாழும் முஸ்லிம் மக்கள் சிறுபான்மையினரா? என்ற கேள்வியுடன் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்.!


ஜம்மு-காஷ்மீரில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம்களுக்கு பொருந்தாது என்று அறிவிக்க வேண்டும்

 என தொடரப்பட்ட பொதுநல வழக்கில் காஷ்மீரில் வாழும் முஸ்லிம் மக்கள் சிறுபான்மையினரா? என்ற கேள்வியுடன் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநில மக்கள் தொகையில் 68 சதவீதத்தவர்களாக இருக்கும் முஸ்லிம்கள் பிற மாநிலங்களில் பிரதமரின் நலத்திட்டங்களின் மூலம் அளிக்கப்படும் சலுகைகளை அனுபவித்து வருவதை தடை செய்ய வேண்டும் 

என சுப்ரீம் கோர்ட்டில் அன்குர் ஷர்மா என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சிறுபான்மையினர் கமிஷன் என்ற ஒரு தனி அமைப்பு ஏதுமில்லை எனவும் தனது மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.எஸ் தாக்கூர் தலைமையிலான அமர்வின்முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக உரிய விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு மற்றும் தேசிய சிறுபான்மையினர் கமிஷனுக்கும் இதுதொடர்பாக நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டுள்ள சுப்ரீம் கோர்ட், ஜம்மு-காஷ்மீரில் 

பெரும்பான்மையாக வாழ்ந்துவரும் முஸ்லிம் மக்கள் தற்போது அனுபவித்துவரும் சிறுபான்மையினருக்கான சலுகைகளுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.