Breaking News
recent

கள்ள நோட்டுக்களை எப்படி கண்டறிவது?….. விளக்கமான தகவல்.!


கள்ள நோட்டுக்களை எப்படி கண்டறிவது? 500 ரூபாய் நோட்டில் உள்ள கவனிக்கத்தக்க அம்சங்கள் என்ன? இப்போது விளக்கமாக பார்க்கலாம்.
உங்கள் கைக்கு வரும் ரூபாய் நோட்டு உண்மையானதா என்ற சந்தேகம் வந்தால் நன்றாக தடவிப்பார்க்கவும் அல்லது கூர்ந்து கவனிக்க வேண்டும். 
உண்மையான ரூபாய் நோட்டில் மத்தியில் இருக்கும் இழையில் ஆர்.பி.ஐ என்று பச்சை நிறத்தில் பொறிக்கப்பட்டிருக்கும். போலி ரூபாய் நோட்டில் இந்த எழுத்து இருக்காது. நோட்டின் வ‌லதுபக்கத்தில் வரிசை எண்ணுடன் A, E, F உள்ளிட்ட எழுத்துக்கள் பெரிதாக அச்சிடப்பட்டிருக்கும். இது போலியான நோட்டுகளில் இருக்காது.
இந்திய அசோக ஸ்தூபி, ஆளுநர் கையெழுத்து மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவையின் இலச்சினைகள் விரலால் தடவி பார்த்தால் உணரும் வகையில் பொறிக்கப்பட்டிருக்கும். நோட்டின் மையத்தில் பெரிதாக இருக்கும் 500 ரூபாய் எழுத்தை சாய்வாக பார்த்தால் மின்னும் தன்மை உண்மையான நோட்டில் மட்டும்தான் இருக்கும்.
மேலும், ரூபாய் நோட்டை சாய்வாக பார்த்தால் இடது பக்கத்தில் மறைந்திருக்கும் காந்தியடிகளின் உருவம் தெரியும். நோட்டின் இடதுபக்கத்தில் மறைவாக சிறிதாக அச்சிடப்பட்டிருக்கும் 500 ரூபாய் எண் சாய்வாக பார்த்தால், உடைந்து வித்யாசமாக தென்படும்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.