Breaking News
recent

“நான் ஒரு இஸ்லாமியன்,மற்றவரின் பணத்தில் தன்னுடைய வறுமையை போக்கி கொள்கிறவன் உண்மையான இஸ்லாமியனாக இருக்க முடியாது.!


ஜேர்மனி நாட்டில் அனாதையாக கிடந்த 50,000 யூரோக்களை பணத்தை மோசடி செய்யாமல் பொலிசாரிடம்  ஒப்படைத்த அகதிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
சிரியா நாட்டை சேர்ந்த முகன்னாட் என்ற 25 வயதான வாலிபர் புகலிடம் கோரி கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஜேர்மனியில் குடியேறினார்.மேற்கு Rhine-Westphalia மாகாணத்தில் உள்ள Minden என்ற நகரில் தங்கியிருந்தபோது வீட்டு பொருட்களை வாங்க தீர்மானித்துள்ளார்.
வாலிபர் ஏழ்மை நிலையில் இருந்ததால், பொருட்களை புதிதாக வாங்காமல் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பீரோ ஒன்றை குறைந்த விலைக்கு வாங்கியுள்ளார். பீரோவை வீட்டிற்கு கொண்டு வந்து சுத்தம் செய்ய தொடங்கியுள்ளார். அப்போது, உள்ளே ஒரு மரப்பெட்டி பூட்டிய நிலையில் இருந்துள்ளது.
உடனடியாக அதை உடைத்து உள்ளே பார்த்தபோது பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பெட்டிக்குள் கட்டுக்கட்டாக 50000 யூரோ தாள்கள் இருந்துள்ளன. இவ்வளவு பெரும் தொகையை பார்த்திராத அவர், இவை அனைத்தும் போலி தாள்களாக இருக்கலாம் என எண்ணியுள்ளார். இதனை உறுதிப்படுத்திக்கொள்ள இணையத்தளத்தில் பரிசோதனை செய்தபோது, அவை அனைத்தும் உண்மையான தாள்கள் என அரிந்து மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனடியாக குடியமர்வு அதிகாரிகளை தொடர்புக்கொண்ட அவர் பணம் குறித்து தகவல் அளித்துள்ளார்.
வாலிபரின் வீட்டிற்கு வந்த அதிகாரிகளிடம் பணத்தை ஒப்படைத்துள்ளார்.
இது குறித்து வாலிபர் பேசியபோது, ‘நான் ஒரு இஸ்லாமியன். மற்றவரின் பணத்தில் தன்னுடைய வறுமையை போக்கி கொள்கிறவன் உண்மையான இஸ்லாமியனாக இருக்க முடியாது.
இவ்வாறு செய்வது இஸ்லாமிய மதத்திற்கு எதிரான செயலாகும்’ என பதிலளித்துள்ளார்.
பெரும் தொகை கிடைத்தும் அதனை பொலிசாரிடம் ஒப்படைத்த வாலிபருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
மேலும், கண்டுபிடிக்கப்பட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைக்கும்போது, வாலிபருக்கு அத்தொகையின் மதிப்பில் 3 சதவிகிதம் சன்மானம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.