Breaking News
recent

உங்கள் ரூபாய் நோட்டுகள் காலாவதியாகிவிட்டதா? ரிவர்ஸ் கியரில் ரிசர்வ் வங்கி.!


2005ம் ஆண்டுகளுக்கு முந்தைய ரூபாய் நோட்டுகளை இன்று முதல் வங்கிகளில் மாற்ற முடியாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

2005-ம் ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறைவாக இருந்ததால் தற்போது கள்ளநோட்டு புழக்கத்தை தடுக்க கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்பட்டு வருகிறது.

தற்போது புழக்கத்தில் உள்ள 2005-க்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி திரும்ப பெற்று வந்தது. இந்நிலையில், இன்று முதல் வங்கிகளில் இந்த நோட்டுக்கள் திரும்ப பெறப்படாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

"யாரேனும் இந்த ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் வைத்திருந்தால் அவர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் டெபாசிட் செய்வதன் மூலம் மாற்றிக் கொள்ளலாம். 

இதுதவிர அகமதாபாத், பெங்களூரு, பெலாப்பூர், போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, கவுகாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், டெல்லி, பாட்னா, திருவனந்தபுரம் மற்றும் கொச்சியில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகங்களிலும் மாற்றிக் கொள்ளலாம்" என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.