Breaking News
recent

வெளிநாட்டில் படிக்க உதவும் உதவித்தொகைகள்.!


வெளிநாட்டிற்கு படிக்கச் செல்லும் இந்திய மாணவர்களுக்கு உலகெங்கும் நூற்றுக்கணக்கான கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. 

நன்றாகப் படிக்கும் திறமையான மாணவர்கள் இந்த உதவித்தொகைகளைப் பெற முடியும். முக்கியமான சில உதவித்தொகைகளைப் பார்க்கலாம்.

1.ஐ.ஏ.எஃப்.எஸ். இன்டர்நேஷனல் ஸ்காலர்ஷிப்

வழங்குவது: American Institute for Foreign Study
யாருக்குக் கிடைக்கும்: +2 தேர்ச்சி பெற்று அமெரிக்கா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் ஏ.ஐ.எஃப்.எஸ். அமைப்புடன் தொடர்புடைய 200 கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்கு.

எவ்வளவு: ஒரு செமஸ்டருக்கு 1000 அமெரிக்க டாலர்
விண்ணப்பிக்க: ஆண்டு முழுவதும்
கூடுதல் விவரங்களுக்கு: :www.aifsabroad.com/scholarships/asp#international

2.அயர்லாந்து ஸ்காலர்ஷிப்

வழங்குவது: யுனிவர்சிட்டி காலேஜ், அயர்லாந்துயாருக்குக் கிடைக்கும்: +2 தேர்ச்சி பெற்று அயர்லாந்தில் உள்ள யுனிவர்சிட்டி காலேஜில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கலைத்துறைகளில் சேரும் இந்திய மாணவர்களுக்கு.

எவ்வளவு: 2000 முதல் 3000 பவுண்ட்
விண்ணப்பிக்க: செப்டம்பர் மாதம் வரை விண்ணப்பிக்கலாம்.
கூடுதல்விவரங்களுக்கு
:www.ucd.ie/international/

3.லேர்ன் ஹப் ட்ரீம் ஸ்டடி அப்ராட் ஸ்காலர்ஷிப்

வழங்குவது: லேர்ன் ஹப் அமைப்பு
யாருக்குக் கிடைக்கும்: அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, தென் கொரிய நாடுகளில் லேர்ன் ஹப் அமைப்புடன் தொடர்புடைய கல்வி நிறுவனங்களில் அறிவியல், 

கலை மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளில் சேரும் இந்திய மாணவர்களுக்கு.

எவ்வளவு: ஒரு செமஸ்டருக்கு 2000 அமெரிக்க டாலர்விண்ணப்பிக்க: செப்டம்பர் மாதம் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு; www.learnhub.com

4.டாடா ஸ்காலர்ஷிப்

வழங்குவது: டாடா நிறுவனம்
யாருக்குக் கிடைக்கும்: +2க்குப் பிறகு அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டிடவியல், கலை, பொறியியல், 

மேலாண்மை மற்றும் அறிவியல் பிரிவுகளில் சேரும் 30 இந்திய மாணவர்களுக்கு.
எவ்வளவு: கல்விச் செலவு முழுவதும்.
விண்ணப்பிக்க: ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை விண்ணப்பிக்கலாம்
கூடுதல் விவரங்களுக்கு: www.admissions.cornell.edu/apply/internationalstudents/tatascholarship

5.டாக்டர் மன்மோகன்சிங் ஸ்காலர்ஷிப்

வழங்குவது: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்யாருக்குக் கிடைக்கும்: +2 தேர்ச்சி பெற்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மருத்துவம், கால்நடை மருத்துவம் தவிர வேறு துறைகளில் சேரும் மாணவர்களுக்கு.

எவ்வளவு: படிப்புச் செலவு முழுவதும்
விண்ணப்பிக்க: செப்டம்பர் மாதம் விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு: www.cambridgeindia.org/studying/scholarships.html

6.தி ஆக்ஸ்ஃபோர்டு அண்ட் கேம்பிரிட்ஜ் சொசைட்டி ஆஃப் இந்தியா ஸ்காலர்ஷிப்

வழங்குவது: தி ஆக்ஸ்ஃபோர்டு அண்டு கேம்பிரிட்ஜ் சொசைட்டி ஆஃப் இந்தியா.யாருக்குக் கிடைக்கும்: +2 தேர்ச்சிபெற்று இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் சேரும் இந்தியமாணவர்களுக்கு.

எவ்வளவு: படிப்புச் செலவு முழுவதும்
விண்ணப்பிக்க: ஆகஸ்ட் மாதம் விண்ணப்பிக்க வேண்டும்
கூடுதல் விபரங்களுக்கு: www.oxbridgeindia.com/scholarships/
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.