Breaking News
recent

அபுதாபியில் கிரடிட் கார்டுகள் மீது சேவை கட்டணம் வசூலித்தால் அபராதம்.!


மனிதர்களின் நிம்மதியை இழக்கச் செய்யும், வட்டி எனும் பாவப்படுகுழியில் தள்ளும் கிரடிட் கார்டுகள் பாவனைகள் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றே என்றாலும் சில அமீரக அரசுசார் நிறுவனங்களில் கிரடிட் அல்லது டெபிட் கார்டுகளை கொண்டே பணப்பரிவர்த்தனை செய்யும் கட்டாய நடைமுறையும் அமலில் உள்ளது.

தற்போது நாம் பேசும் விஷயம் மேற்படி பாவனை குறித்தல்ல மாறாக கிரடிட் கார்டுகள் கொண்டு வாடிக்கையாளர்கள் வியாபாரிகளுக்கு கட்டணம் செலுத்தும் போது அதன் மேல் மேற்கொண்டு சேவை கட்டணம் என்று கூடுதலாக பணத்தை பிடுங்குவதும் வியாபாரிகள் மத்தியில் நடைமுறையில் உள்ளது.

அபுதாபி பொருளாதார மேம்பாட்டுத்துறையின் கடுமையான உத்தரவின் படி, 2009 ஆம் ஆண்டு விதிமீறல் சட்டம் எண் 2 கீழ் வரும் துணை விதிமீறல் எண் 87ன் படி இனி கூடுதல் கட்டணம் வசூலித்தால் சுமார் 1 லட்சம் திர்ஹம் வரை அபராதம் செலுத்த நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து புகார் தெரிவிக்க 800555 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் பொருளாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது அபுதாபியில் இயங்கும் அனைத்து தனியார் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

Source: Gulf News
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.