Breaking News
recent

ஷார்ஜாவில் தொழிலாளர் நல விழிப்புணர்வு பிரச்சாரம்.!


அமீரகத்தில் 'வீடுகட்டி' அடிக்கும் வெயில் வாட்டி வருவதால் வெளிப்புறங்களில் வேலை பார்க்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் உச்சி வெயில் அடிக்கும் போது (பகல் 12.30 முதல் மாலை 3 மணி வரை) கட்டாய இடைவேளை (ஓய்வு) விடும் சட்டமும் நடைமுறையில் உள்ளது. 

இதனை மீறும் நிறுவனங்கள் சுமாhம் 5000 அபராதம் செலுத்த நேரிடும் மேலும் அதிகமான தொழிலாளர்கள் வேலையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தால் 50000 வரை அபராதம் அதிகரிக்கும்.

ஷார்ஜா தொழிலாளர் நிலை மேம்பாட்டு ஆணையம் (The Sharjah Labour Standards Development Authority) சார்பாக தொழிலாளர் நல விழிப்புணர்வு பிரச்சாரம் இன்று மேற்கொள்ளப்பட்டது. 


இதில் 'நாங்கள் உங்கள் நலனின் மீது அக்கறை கொள்கிறோம்' (We Care for Your Comfort) என்ற சுலோகத்துடன் வெயில் நேரத்தில் குளிர் சுகமளிக்கும் ஜாக்கெட் ஒன்றும் பல்வேறு மொழிகளில் 'உச்சி வெயில் நேரத்தில் தொழிலாளர்களுக்கு அரசு வழங்கியுள்ள உரிமைகள்' குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் துண்டு பிரசுரங்களுடன் பரிசுப் பொருட்களும் ஷார்ஜா பல்கலைகழக சுற்றுப்புறங்களில் விநியோகிக்கப்பட்டன.

Source: Khaleej Times
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.