Breaking News
recent

பிரணாப் அளித்த இஃப்தார் விருந்து.!


ஒற்றுமை உணர்வையும், இந்தியாவின் பன்முகத் தன்மை மீதான பெருமிதத்தையும் ஒவ்வோர் இந்தியருக்கும் உணர்த்தும் வகையில் ரமலான் நோன்பு அமைந்துள்ளதாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறினார். 

ரமலான் நோன்பை முன்னிட்டு, தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் வெள்ளிக்கிழமை இஃப்தார் விருந்தளித்தபோது அவர் இவ்வாறு கூறினார். 

இந்த விருந்தில் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், சிறுபான்மை நலத் துறை இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் யெச்சூரி உள்ளிட்

டோர் கலந்து கொண்டனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.