Breaking News
recent

உங்கள் புகைப்படத்துடன் தபால் தலை பெறலாம்: இந்திய தபால் துறை வழங்கும் புதிய சேவை.!


தபால் தலையில் நாம் விரும்பும் புகைப்படத்தை இடம்பெறச் செய்யும் சேவையை இந்திய தபால் துறை விரிவுபடுத்தியுள்ளது. 

சென்ற 2011-ம் ஆண்டு உலக தபால்தலை தபால் தலை கண்காட்சியில் இந்த சேவை துவங்கப்பட்டிருந்தாலும் தற்போது நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்ட முக்கிய தபால் நிலையங்களில் இந்த சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

'மை ஸ்டாம்ப்' என அழைக்கப்படும் இந்த சேவையில் நமது புகைப்படம் மட்டுமின்றி நமது நண்பர்கள், உறவினர்களின் புகைப்படத்தையும் இடம்பெறச் செய்யலாம். 

நாம் விரும்பும் பாரம்பரிய கட்டிடங்கள், பிரபலமான சுற்றுலா இடங்கள், வரலாற்று சிறப்புமிக்க நகரங்கள், வனப்பகுதிகள், விலங்குகள், பறவைகள் ஆகிய புகைப்படங்களையும் இடம்பெறச் செய்யலாம்.

சொந்த புகைப்படத்தை தபால் தலையில் இடம்பெறச் செய்ய புகைப்படத்துடன் கூடிய அடையாள சான்று நகலையும் சமர்பிக்க வேண்டும். 

தனிநபருக்கு மட்டுமின்றி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இந்த சேவையை தபால் துறை வழங்குகிறது. 

போட்டோ வழங்கப்பட்ட 7 நாட்களுக்குள் தபால் தலைகள் ஸ்பீடு போஸ்ட் வாயிலாக அனுப்பப்படுகிறது. 

தனிநபரின் புகைப்படத்துடன் கூடிய 12 தபால் தலைகள் கொண்ட ஒரு ஷீட்டிற்கு ரூ.300 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

எனினும், கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது லோகோ அல்லது புகைப்படத்தை தபால் தலையில் பெற குறைந்தது 100 ஷீட்டுகளை பெற வேண்டும். 

அதற்கான கட்டணம் தனிநபருக்கான தபால் தலையில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாகும்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.