Breaking News
recent

துபாயில் 64 டிகிரி செல்சியஸ் வெப்பம் போன்ற உணர்வு நிகழும்.!


வளைகுடா நாடான துபாய் உள்ளிட்ட நகரங்களில் கோடை வெப்பம் 64 டிகிரி செல்சியஸ் வெப்பம் போன்ற உணர்வு ஏற்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

வளைகுடா நாடான யு.ஏ.இ. யில் அடுத்த வாரம் கோடை காலம் துவங்குகிறது. இங்கு சாதாரண நிலையில் அதிகபட்சமாக 45 முதல் 49 டிகிரி செல்சியஸ் வரை கோடை வெப்பம் நிகழும்.

இது குறித்து அந்நாட்டு தேசிய வானிலை மற்றும் பூகம்பவியல் மையத்தின் (எம்.சி. எம்.எஸ்) நிபுணர் அகமது ஹபீப் கூறியதாவது, துபாய், அபுதாபி உள்ளிட்ட நகரங்களில் காற்றில் ஈரப்பதம் அதிகரித்து, அனல் காற்று வீசும், இது 65 டிகிரி செல்சியஸ் வெப்பம் போன்ற உணர்வை ஏற்படுத்தும். 

குறிப்பாக நகரப்பகுதிகளை விட கடலோரப்பகுதிகளில் இரவிலும், அதிகாலையிலும் இதுபோன்ற உணர்வு ஏற்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.