Breaking News
recent

இனி நடுத்தர மக்களும் விமானத்தில் பயணம் செய்யலாம் 500 கி.மீ. தொலைவுக்கு கட்டணம் ரூ.2,500.!


இந்தியாவின் முதல் சிவில் விமான போக்குவரத்து கொள்கைக்கு கடந்த மாதம் மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

அதைத் தொடர்ந்து விமான கட்டணங்கள் குறையும், நடுத்தர மக்களும் விமானங்களில் பயணம் செய்கிற வாய்ப்பு உருவாகும் என தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் டெல்லியில் சிவில் விமான போக்குவரத்து துறை ராஜாங்க மந்திரி மகேஷ் சர்மா, கேபினட் மந்திரி அசோக் கஜபதி ராஜூவுடன் நிருபர்களை சந்தித்து இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். 

அப்போது அவர் கூறும்போது, ‘‘ஆர்.சி.எஸ். என்னும் பிராந்திய இணைப்பு திட்டத்தின்படி, 35 கோடி நடுத்தர மக்கள் விமானங்களில் பயணம் செய்யும் வாய்ப்பு உருவாகிறது. 

இந்த வகையில் 30 விமான நிலையங்கள் முதன்முதலாக செயல்படத்தொடங்கும்’’ என்றார்.

பிராந்திய இணைப்பு திட்டத்தின்படி சுமார் 500 கி.மீ. தொலைவிலான விமான பயணத்துக்கு ரூ.2,500 கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது எனவும் அவர் அறிவித்தார்.

இந்த திட்டம், 200 கி.மீ. தொலைவில் இருந்து 800 கி.மீ. தொலைவிலான தடங்களுக்கு பொருந்தும். 

அதே நேரத்தில் மலைப்பாங்கான பகுதிகளுக்கும், தொலை தீவுகளுக்கும், பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கும் இந்த வரையறை பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டியின் போது மந்திரி மகேஷ் சர்மா வெளியிட்ட பிற முக்கிய தகவல்கள்:–* பிராந்திய இணைப்பு திட்டத்தின்கீழ், மத்திய அரசு மதிப்பு கூட்டு வரியில் 2 சதவீத அளவுக்கு சலுகை வழங்கும்.

*இந்த திட்டத்தின்கீழ் இயங்குகிற விமானங்களுக்கு தரை இறங்கும் கட்டணம், நிறுத்துமிட கட்டணங்கள், முனையத்தில் வழிசெலுத்தும் கட்டணம் கிடையாது.

பிராந்திய இணைப்பு திட்டத்தின்கீழ் இரண்டாம் நிலை நகரங்களும், மூன்றாம் நிலை நகரங்களும் இணைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.