Breaking News
recent

உலமாக்கள் மாத உதவித் தொகை ரூ.1000-லிருந்து ரூ.1,500 ஆக உயர்வு.!


தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2016-17ஆம் ஆண்டுக்கான திருத்த வரவு – செலவு (பட்ஜெட்) திட் டத்தில் உலமாக்கள் மாத உதவித் தொகை 1000 ரூபாயிலிருந்து ரூ.1,500 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டது.

 இந்த ஆண்டின் நிதி பற்றாக்குறை ரூ.40,533 கோடியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

காலை 11 மணியளவில் 2016-2017-ம் ஆண்டுக்கான திருத் திய நிதிநிலை அறிக்கையை (பட் ஜெட்) நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.

 புதிய அரசின் முதல் பட்ஜெட்டான இதில் உள்ள அம்சங்கள் குறித்து நிதியமைச்சர்உரையாற்றினார்.அதன் விவரம் வருமாறு:-

இராமநாதபுரம், புதுக் கோட்டை, திண்டுக்கல், சிவ கங்கை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய ஒன்பது தென் மாவட்டங்களில் 19,000 ஏக்கர் பரப்பளவில் தொழிற்சாலைகளுக்கான நில வங்கியை அமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் சிப்காட் நிறுவனம் மேற் கொண்டு வருகிறது.

மதுரை – தூத்துக்குடி தொழில் வழித்தடம், ஒரு இலட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் 25,000 கோடி ரூபாய் மதிப்பி லான முதலீடுகளை ஈர்த்திட உதவும். 

இத் திட்டத்தைச் செயல்படுத் துவதற்கான முன்முயற்சி யாக மதுரை – தூத்துக்குடி தொழில் வழித்தட மேம் பாட்டுக் கழகம் எனும் சிறப்பு நோக்கு முகமையை சிப்காட் நிறுவனம் அமைத்துள்ளதுடன், இத் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத் தும் பணிகளையும் விரைவு படுத்தியுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை – பெங்களூரு தொழில் வழித் திடத் திட்டத் தின் கீழ், பொன்னேரி தொழில் முனையத்தை தேசிய முதலீடு மற்றும் உற்பத்தி மண்டலமாக மேம்படுத்துவதற்கான பணி களை இந்த அரசு மேற் கொண்டு வருகிறது. 

தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகம், சிப்காட் நிறுவனத்துடன் இணைந்து, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் சுமார் 306 ஏக்கர் பரப்பளவில் பாலிமர் தொழிற் பூங்காவினை 294 கோடி ரூபாய் செலவில் அமைத்து வருகிறது.

இப் பூங்காவில் சிறு மற்றும் நடுத்தர பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் 84 அலகுகள் இடம் பெறும். ஸ்ரீபெரும்புதூர் வட்டம், வல்லம் வடகாலில் அமைந்துள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் வான்வெளிப் பூங்கா அமைப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

ஒட்டன்சத்திரம் திருப்பூர் நெல்லை கொல்லம் அரசு தனியார் கூட்டு பங்களிப்பு முறையில் 4 வழிச்சாலையாக்கப்படும். 

சேலம் 5 சாலை சந்திப்பில் மேம்பால பணிகள் துரிதப் படுத்தப்படும் வானூர்தி வடிவமைப்பு, வானூர்திகளுக்கான உதிரிப் பாகங்கள் தயாரிப்பு, பராமரிப்பு மற்றும் பழுது பார்த்தல் வசதிக ளுடன் இப்பூங்கா செயல்படும்.

சிறுபான்மையினர் நலன்

கிறிஸ்தவர்கள் ஜெருசலத் திற்கு புனிதப்பயணம் செல்வ தற்காக நிதியுதவி வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல் படுத்தப்படும். 

தமிழ்நாடு வக்ஃபு வாரியம் மற்றும் தமிழ்நாடு ஹஜ் குழு ஆகியவற்றிற்கான வருடாந்திர நிர்வாக மானியம் போன்ற இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக இந்த அரசால் வழங்கப்பட்டு வரும் உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும். 

மேலும், தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தவாறு, உலமாக்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகை ரூ.1000-லிருந்து ரூ.1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

நிதிநிலைக் குறியீடுகள்

இடைக்கால வரவு – செலவுத் திட்ட மதிப்பீடுகளில், 1,52,004.23 கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப் பட்ட மொத்த வருவாய் வரவுகள் 2016-2017 ஆம் ஆண்டின் திருத்த வரவு – செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 1,48,175.09 கோடி ரூபாயாக இருக்குமென தற்போது மதிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் சிறு, குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய நிலுவையிலுள்ள விவசாயக் கடன் தள்ளுபடி 

மற்றும் அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் போன்ற புதிய திட்டங்களைச் செயல்படுத்துவ தாலும், ஏற் கனவே 

செயல்படுத்தப்பட்டு வந்த பல்வேறு நலத் திட்டங் களை தொடர்ந்து செயல் படுத்த உள்ளதாலும் மாநிலத் தின் செலவுகள் அதிகரித்துள்ளன.

இடைக்கால வரவு – செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 1,61,159.01 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்ட வருவாய் செலவினங்கள் 2016-17 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு செலவுத் திட்ட மதிப்பீடு களில் 1,64,029. 56 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள் ளது. 

இதன் விளைவாக நடப்பு நிதியாண்டிற்கான வருவாய் பற்றாக்குறை 15, 845. 47 கோடி ரூபாயாக திருத்தி மதிப்பிடப் பட்டுள்ளது. 

இதனால், சட்ட மன்றப் பேரவையின் இக் கூட் டத்தொடரில் தமிழ்நாடு நிர்வாக 

பொறுப்புடைமைச் சட்டம் 2003-ல் உரிய திருத்தங் கள் கொண்டு வரப்படும்.2016 -2017 ஆம் ஆண்டிற் கான திருத்த வரவு – செலவுத் திட்ட மதிப்பீடுகளில், நிதிப் பற்றாக்குறை 40, 533. 84 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. 

இது, மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 2. 96 சதவீத மாகும். இது, தமிழ்நாடு நிதி நிலை நிர்வாகப் பொறுப்பு டைமைச் சட்டம், 2003-ல் குறிப் பிடப்பட்டுள்ள வரையறைக்கு உட்பட்டே உள்ளது.மேற்கண்டவாறு பட்ஜெட் உரையில் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.