Breaking News
recent

விமானம் தாமதமானால் பயணிகளுக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு: விமான போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பு அறிவிப்பு.!


உள்நாட்டு விமானங்கள் தாமதம் ஆனாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் பயணிகளுக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது

இந்திய உள்நாட்டு விமானங்கள் தாமதம் அல்லது ரத்து செய்யப்பட்டாலும், பயணிகளை ஏற்ற மறுத்தாலோ சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் பயணிகளுக்கு இதுவரை ரூ.4 ஆயிரம் இழப்பீடாக வழங்கி வந்தது.

இந்த நிலையில் இந்த இழப்பீட்டை அதிகரித்து விமான போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பு அறிவித்துள்ளது. அதன்படி இனி உள்நாட்டு விமானங்கள் 2 மணி நேரத்துக்கு முன்னதாக தாமதம் ஆனாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் பயணிகளுக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

அதே போல் விதிமுறைகளை மீறி பயணிகளை விமானத்தில் ஏற்ற மறுத்தால் ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த உத்தரவு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 1–ந் தேதி முதல் அமல் ஆகிறது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.