Breaking News
recent

சவுதியில் விசாயில்லாமல் தங்கியிருந்தால் 1 லச்சம் சவூதி ரியால் அபராதம் 2 வருட சிறை.!


சவூதி அரேபியா நாட்டிற்கு சுமார் 6 மில்லியன் புனித யாத்ரீகர்கள் வருகை தந்திருந்த இந்த வருட உம்ரா சீசன் நிறைவுற்றதை தொடர்ந்து அனைத்து உம்ரா யாத்ரீகர்களும் விசா தேதி முடிவு கெடுவிற்குள் சவூதி நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என சவூதி அரசு அறிவித்துள்ளது.

விசா முடிந்தும் சட்டவிரோதமாக தங்கும் நபர்களுக்கு அடைக்கலம் தரும் அனைவருக்கும் 1 லட்சம் சவூதி ரியால் வரை அபராதத்துடன் 2 வருட சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.

மேலும், சட்ட விரோத அடைக்கலம் தருபவர் வெளிநாட்டு பிரஜையாக இருக்கும் பட்சத்தில் தண்டனை காலத்திற்குப் பிறகு அவரது நாட்டிற்கு திரும்ப அனுப்பப்படுவார் என்றும் சவூதி பாஸ்போர்ட் கட்டுப்பாட்டுத் துறை எச்சரித்துள்ளது.

நோயாளிகள் தகுந்த ஆவணங்களை வழங்கினால் மட்டுமே அவர்களது விசா காலம் மருத்துவமனையிலிருந்து வெளியேறும் காலம் வரை நீட்டிக்கப்படும் எனவும் விளக்கப்பட்டுள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.