Breaking News
recent

பதிவுகள், கமெண்ட்கள் உள்ளிட்டவற்றை எல்லா மொழிக்கும் மொழிமாற்றம் செய்யும் வசதியுடன் instagram.!


மொழியின் தடையை உடைத்தெறியும் வகையில் மொழிமாற்ற வசதியை அறிமுகப்படுத்தி அசத்த உள்ளது இண்ஸ்டாகிராம்!

ஸ்மார்ட் போன்கள் உலகத்தை கற்பனைக்கு எட்டாத வகையில் கைக்குள் அடக்கியுள்ள போதிலும் அவைகள் மேலும் மேம்பாடு காணவேண்டிய தேவையை பயனீட்டாளர்கள் உணர்ந்து வருகின்றனர்.


 தனக்கான சந்தையை காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு அவர்களின் தேவையை உடனடியாக நிறுவனங்களும் மேம்படுத்தி அளித்து வருகின்றன. செல்போன்கள், ஸ்மார்ட் போன்களாக பரிணாம வளர்ச்சி அடைந்ததும் இந்த வகையில் தான்.

இதேபோல், பல சமூக வலை தளங்கள் பிறருடன் போட்டிபோடும் வகையிலும், பயன்பாட்டாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் புதிய புதிய கண்டுபிடிப்புகளை, புதிய புதிய சேவை வசதிகளை வழங்கி வருகின்றன. 


அந்த வகையில் பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான போட்டோகளுக்கான பிரத்யேக சமூக வலைதளமான இண்ஸ்டாகிராம் புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. மானுட இனம் ஒன்றென்ற போதிலும் பல்லாயிரம் மொழிகளால் பிரிக்கப்பட்டுள்ளவர்களை ஒருகுடையின் கீழ் கொண்டு வரும் வகையில், மொழியாக்க வசதியை இண்ஸ்டாகிராம் ஏற்படுத்துகிறது.



இதன்படி, செட்டிங் உள்ளிட்டவற்றை உங்களது மொழிகளில் நீங்கள் வைத்துக் கொள்வதுடன், படத்துடன் எழுதப்படும் வாக்கியங்களையும், கமெண்ட்களையும் உங்களது மொழிகளில் மொழியாக்கம் செய்து படித்துக் கொள்ள முடியும். முதற்கட்டமாக சில மொழிகளுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ள இந்த வசதி விரைவில் உலகின் முக்கிய மொழிகளுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது.

VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.