Breaking News
recent

தொழில்நுட்ப வளர்ச்சியின் புதிய கண்டுபிடிப்பு: வை- பை இணைப்பில் வாட்டர் ஹீட்டர்.!


வை-பை இணைப்பில் வாட்டர் ஹீட்டர் அறிமுகமாகியுள்ளது பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.
மின் மற்றும் மின்னணு சாதனங்கள் தயாரிப்பிலுள்ள தென்னிந்திய நிறுவனமான வி-கார்டு நிறுவனம் நவீன வசதிகளுடன் கூடிய `வெரானோ’ என்கிற புதிய வகையிலான வாட்டர் ஹீட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. 
புதிய வாட்டர் ஹீட்டரை நிறுவனத்தின் இயக்குநரும், தலைமைச் செயல்பாட்டு அதிகாரியுமான ராமச்சந்திரன் அறிமுகப்படுத்தி பேசியதாவது:
எங்கள் நிறுவனம் தென்னிந்தியாவில் ஸ்டெபிலைசர், இன்வெர்ட்டர், யுபிஎஸ் சிஸ்டம்ஸ் தயாரிப்புகளில் முன்னணியில் உள்ளது. இந்நிலையில், எங்களது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு குழுவின் முயற்சியில் உருவான இந்த புதிய வகை வாட்டர் ஹீட்டர் வாடிக்கயாளர்களை ஈர்க்கும் என நம்புகிறேன்.
மேலும், இந்த வெரானோ வாட்டர் ஹீட்டரை வை-பை இணைப்பின் மூலம் ஸ்மார்ட்போனிலிருந்தே இயக்கலாம். இதற்கான செயலியிலிருந்து நமது வசதிக்கு ஏற்பவும் இதை இயக்க முடியும். இதிலுள்ள சென்சார்கள், நீரில் வெப்ப நிலையை ஸ்மார்ட்போனுக்கு அனுப்பும் வகையில் நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 5 நட்சத்திர தரச் சான்றுடன் மின்சாரத்தை சிக்கனப்படுத்தும் கருவியாக இது உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.