Breaking News
recent

இந்திய முஸ்லிம்கள் வன்முறையில் நாட்டமில்லாதவர்கள்: ஹமீது அன்சாரி.!


இந்திய முஸ்லிம்கள், வன்முறைச் சித்தாந்தங்கள், நடவடிக்கைகளின் மீது நாட்டமில்லாதவர்கள் என்று குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி தெரிவித்தார்.

 மொராக்கோ, துனீஷியா நாடுகளில் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

 இந்தப் பயணத்தின் முதல்கட்டமாக மொராக்கோ நாட்டுக்கு சென்றுள்ள அவர், அந்நாட்டுத் தலைநகரான ரபாட்டில் முன்னாள் சுல்தான் முகமது பெயரில் இருக்கும் முகமது பல்கலைக்கழகத்துக்கு புதன்கிழமை சென்றார்.

 அங்கு அவருக்கு கௌரவ முனைவர் பட்டம் அளிக்கப்பட்டது. அதைப் பெற்றுக் கொண்டு அன்சாரி ஆற்றிய உரை வருமாறு:

 மதப் பன்முகத்தன்மை கொண்ட இந்திய நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். 

நவீன இந்தியாவில் முஸ்லிம் மதத்தை போதிப்பவராக இருந்தாலும், அவர்களும் இந்தியக் குடிமக்கள்தான். அவர்களும் தங்களை இந்திய குடிமக்களாகவே உணர்கின்றனர்.

 இந்திய முஸ்லிம்களுக்கு, அரசமைப்புச் சட்டத்தின்கீழ் அனைத்து நலன்களை அனுபவிக்கும் உரிமைகளும் அளிக்கப்பட்டுள்ளன. 

ஆட்சி அமைப்புகளுக்கு நடத்தப்படும் தேர்தல்களில் முழு அளவில் தங்களை அவர்கள் ஈடுபடுத்திக் கொள்கின்றனர். 

அந்த அமைப்புக்குள்பட்டு தங்களது பிரச்னைகளுக்கு அவர்கள் தீர்வுகளைக் கோருகின்றனர். வன்முறைச் சித்தாந்தங்கள், நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் இந்திய முஸ்லிம்களுக்கு ஆர்வம் கிடையாது என்றார் ஹமீது அன்சாரி.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.