Breaking News
recent

சர்வதேச வெங்காய வணிக நகராக பெரம்பலூரை மாற்ற புதிய திட்டம்.!


வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மற்றும் இந்திய பயிர் பதன தொழில்நுட்பக் கழகம் இணைந்து பெரம்பலூர்  செட்டிகுளம் வெங்காய வணிக வளாகத்தில் சின்னவெங்காயத்தில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பது தொடர்பான பயிற்சி முகாம் நேற்று  நடந்தது. 

வெங்காயத்திலிருந்து வெங்காய ஊறுகாய், வெங்காய கூழ் மற்றும் உப்புக் கரைசலில் ஊற வைத்த வெங்காயம் உள்ளிட்டவற்றை மதிப்புக்  கூட்டப்பட்ட பொருட்களாகத் தயாரிப்பது தொடர்பான செயல் முறை விளக்கங்கள் விவசாயிகளுக்கு நேரடியாக செய்து காண்பிக்கப்பட்டது.

வயல்வெளிகளில் இருந்து அறுவடை செய்யப்படும் சின்ன வெங்காயத்தை அதிகநாட்கள் நிறம் மாறாமல் மற்றும் எடைகுறையாமல் இருப்பதற்காக  வடிவமைக்கப்பட்ட வெங்காய சேமிப்புப் பட்டறையின் அமைப்பு மற்றும் செயல் விளக்கங்கள் இந்திய பயிர்பதன தொழில்நுட்பக் கழக அலுவலர்கள்  மூலம் விவசாயிகளுக்கு உரியவிளக்கங்கள் அளிக்கப்பட்டது. 

 இந்திய பயிர்பதன தொழில்நுட்பக் கழக இயக்குநர் அனந்தராமகிருஷ்ணன் பேசியதாவது  :

சின்னவெங்காயம் உள்நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாமல், பழங்கள் மற்றும் காய்கறிகள் மத்தியில் உயர்ந்த அன்னியச்செலாவணி வருமானத்தை  ஈட்டித்தரக் கூடிய ஒரு முக்கியப் பயிராகும். 

உலகளவில் வெங்காய உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தை வகிக்கின்றது. தமிழகத்தில்  அதிகப்படியாக பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் உற்பத்தியாகிறது. 

இதுபோன்ற தொழில்நுட்பங்கள், தமிழக அளவில் சின்ன வெங்காய உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் பெரம்பலூர் மாவட்டத்தை உலகளாவிய  வெங்காயத்திற்கான வணிக நகரமாக மாற்ற உதவும் என்றார். 

முகாமில் வெங்காயத்திலிருந்து வெங்காய ஊறுகாய், வெங்காய கூழ் மற்றும்  உப்புக்கரைசலில் ஊறவைத்த வெங்காயம் உள்ளிட்டவற்றை எவ்வாறு தயாரிப்பது தொடர்பான செயல்முறை விளக்கங்கள் விவசாயிகளுக்கு  நேரடியாக செய்து காண்பிக்கப்பட்டது. 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.