Breaking News
recent

துபாயில் வெளிநாட்டினரும் விரும்பி அருந்தும் த‌மிழ‌க‌ நோன்புக் க‌ஞ்சி.!(புகைப்படம் இணைப்பு)


துபாயில் வெளிநாட்டினரும் விரும்பி அருந்தும் த‌மிழ‌க‌ நோன்புக் க‌ஞ்சி துபாய் ஈமான் கல்ச்சுரல் சென்டர் சார்பில் வ‌ருட‌ந்தோறும் ரமலான் நோன்பு காலம் முழுவதும் த‌மிழ‌க‌ பாரம்பரிய சுவையுடன் கூடிய‌ நோன்புக் க‌ஞ்சி வழங்கப்பட்டு வருகிறது. 

இத‌ைத‌மிழ‌ர்க‌ள்ம‌ட்டும‌ன்றிவ‌டஇந்திய‌ர்க‌ள்,அரேபியர்கள்,ஐரோப்பியர்கள் ஆப்பிரிக்க‌ர், ப‌ங்களாதேஷ், பாகிஸ்தான், சீன‌ர்க‌ள் உள்ளிட்ட‌ ப‌ல‌ரும் இன‌, ம‌த‌ வேறுபாடின்றி அருந்தி வருகின்றனர். 

இந்த ஏற்பாடுக‌ள் ஈமான் அமைப்பின‌ரால் துபாய் தேரா ப‌குதியில் உள்ள‌ குவைத் ப‌ள்ளி என்ற‌ழைக்க‌ப‌டும் லூத்தா ஜாமிஆ ம‌ஸ்ஜிதில் ந‌டைபெற்று வ‌ருகின்ற‌ன‌. தின‌மும் 5000 க்கும் மேற்ப‌ட்டோர் இந்த‌ இஃப்தார் என்ற‌ழைக்க‌ப்ப‌டும் நோன்பு துற‌ப்பு நிக‌ழ்வில் ப‌ங்கேற்கின்ற‌ன‌ர். 

இதில் நோன்புக் க‌ஞ்சியுட‌ன், ச‌மோசா, வ‌டை, ப‌ழ‌ம், மின‌ர‌ல் வாட்ட‌ர், பேரித்த‌ம் ப‌ழ‌ம் உள்ளிட்ட‌வை வ‌ழ‌ங்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் 150 பேருடன் துவங்கிய இச்சிறு நிகழ்வு இன்று நாளொன்றூ ஆயிரக்கானோர் பங்கேற்கும் வண்ணம் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. 






VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.