Breaking News
recent

அண்டை மாநிலங்களில் 'ரமலான்' சிறப்பு திட்டங்கள் அறிவிப்பு.!


தமிழகத்தில் முஸ்லிம்கள் முற்றாக புறக்கணிப்பு..!!

டெல்லி, மேற்குவங்கம், தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் 'ரமலான்' மாதத்தை முன்னிட்டு முஸ்லிம்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப் பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:

தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகள் முஸ்லிம்களை எப்படியெல்லாம் ஏமாற்றி அரசியல் செய்கின்றன என்பதை விரிவான தகவல்களுடன் 'மறுப்பு' பக்கத்தில் விரைவில் புள்ளி விவரங்களுடன் வெளியிடவிருக்கிறோம், இன்ஷா அல்லாஹ்.

ஒவ்வொரு மாநிலமும் முஸ்லிம்களின் நலத் திட்டங்களுக்கு செலவழிக்கும் தொகையை,

தமிழக அரசு செயல்படுத்தும் கண் துடைப்பு திட்டங்களுடன் ஒப்பிட்டு 'விழிப்புணர்வு' பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.

டெல்லியிலும் தமிழகத்திலும் கிட்டத்தட்ட ஒரே அளவில் தான்(விகிதாச்சார கணக்கெடுப்பின் படி) முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர்.

ஆந்திர முஸ்லிம்களின் எண்ணிக்கை தமிழகத்தைவிட மிகவும் குறைவு என்றாலும் அங்கு செயல்படுத்தப்படும் முஸ்லிம் நலத்திட்டங்கள் மிக அதிகமாகும்.

தெலுங்கானாவில், தமிழகத்தைவிட இரு மடங்கு(சதவிகித அடிப்படையில்), முஸ்லிம்கள் அதிகமாக உள்ளனர், ஆனால் அங்கு முஸ்லிம்களுக்கு வழங்கபடும் சலுகைகள் ஏராளம்... ஏராளம்.

மேற்கு வங்கத்தில் மிக அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் வாழ்ந்து வந்தபோதும் முந்தைய அரசுகள் நம்மை சரிவரக் கண்டுக் கொள்ளவில்லை.

தற்போதைய மம்தா பானர்ஜி அரசு, முஸ்லிம்களின் முன்னேற்றத்தில் அக்கரை செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் 'நோன்பு கஞ்சி'க்காக 4000 டன் அரிசி வழங்குவதென்பது ஒரு பொருட்டான விஷயமே இல்லை.

காரணம் இங்கு ஒவ்வொரு மாதமும் மக்களுக்கு வழங்கப்படும் விலை இல்லா அரிசியின் அளவு 40,000 டன் ஆகும்.

அதாவது ஆண்டுக்கு, 5 லட்சம் டன் அரிசி இலவசமாக வழங்கும் அரசு, 4000 டன் முஸ்லிம்களுக்கு வழங்குவது பெரிய விஷயமே இல்லை, அதுவும் முறையான விநியோகம் இல்லை என்பது நமக்கு தெரிந்த விஷயம் தானே?
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.