Breaking News
recent

கத்தார்-இந்தியா இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.!


கத்தாரிலிருந்து முதலீட்டை ஈர்க்கிறது இந்தியா:

கத்தார் தலைநகர் தோகாவில் பிரதமர் நரேந்திர மோடி, மன்னர் Sheikh Tamim Bin Hamad Al Thani ஆகியோர் முன்னிலையில் முதலீடு, சுற்றுலா, மருத்துவம், உட்பட 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்த ஒப்பந்தம் மூலம், இந்தியாவின் முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியத்தில் கத்தார் முதலீடு செய்ய இருக்கிறது. கடந்த ஆண்டு இந்தியாவின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு இந்த நிதியத்தை துவக்கியது.

இருதரப்பு பேச்சுவார்த்தை:

இதனையடுத்து, கத்தார் அரசருடன், பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்தினார். அதோடு, அந்நாட்டின் தொழிலதிபர்களைச் சந்தித்த அவர், இந்தியாவில் தொழில்தொடங்க முன்வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். 

இந்தியாவில் வாய்ப்புகள் கொட்டிக்கிடப்பதாகவும், 80 கோடி இளைஞர்கள் உள்ளதால் மனித வளத்தில் முன்னணியில் இருப்பதாகவும் தெரிவித்த பிரதமர், உள்கட்டமைப்பை விரிவாக்கம் செய்வது, மேம்படுத்துவது, உற்பத்தியை அதிகரிப்பது ஆகியற்றிற்கு தமது அரசு முன்னுரிமை அளித்து வருவதாகவும் குறிப்பிட்டார். 

மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், இந்தியாவில் ஸ்மார்ட் நகரங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், நகர்ப்புற கழிவு மேலாண்மை திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் பிரதமர் கூறினார். தமது 2 நாள் கத்தார் பயணத்தை இன்று முடித்துக்கொள்ளும் பிரதமர் மோடி, அங்கிருந்து Switzerland செல்கிறார்.

கடந்த 2008ம் ஆண்டு கத்தார் சென்ற மன்மோகன் சிங்-ற்கு பிறகு அங்கு செல்லும் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.