Breaking News
recent

சவூதி அரசின் புதிய அணுகுமுறை.!


இஸ்லாமிய மார்க்கத்தின் கலாச்சார அடையாளங்களை பிற மதங்களை பின்பற்றுபவர்களும் தெரிந்து கொள்ள உதவும் உயர்ந்த லட்சியத்துடன் சவூதி அரேபியாவில் அமைந்துள்ள நான்கு பிரபலமான பள்ளி வாசல்களில் எல்லோரும் பார்வையிட சவூதி அரசு அனுமதியளித்துள்ளது..

புனித கஃபா இறையில்லத்தின் இமாம் ஷேக் ஷலேஹ் அல் மிஹ்மாஸி வேண்டுகோளுக்கிணங்க முதல் கட்டமாக ஜித்தாவில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில் அமைந்துள்ள அல் றஹ்மா மஸ்ஜித், அல் தஃவா மஸ்ஜித், கிங் ஃபஹத் மஸ்ஜித், கிங் ஸவ்த் மஸ்ஜித் ஆகிய பள்ளி வாசல்கள் முஸ்லிமல்லாதவர்கள் பார்வையிடுவதற்காக திறந்து விடப்படுகிறது.....

இங்கிலாந்து நாட்டில் வாரம் ஒருமுறை Visit my Mosque என்ற பெயரில் முஸ்லிமல்லாத நபர்களை அழைத்து வந்து இஸ்லாம் வலியுறுத்தும் ஒழுக்கம் சார்ந்த உயரிய வாழ்வியல் நெறிமுறைகளை அறிவிக்கும் நிகழ்வுகள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.