Breaking News
recent

துபாயை சுற்றிப் பார்க்க எமிரேட்ஸ் பயணிகளுக்கு சலுகை.!


விமான பயணிகள் துபாயைச் சுற்றிப் பார்க்க பல்வேறு சலுகைத் திட்டங்களை எமிரேட்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இதற் காக மை எமிரேட்ஸ் பாஸ் எனும் சிறப்பு அட்டையை தனது பயணி களுக்கு இந்நிறுவனம் வழங்கு கிறது.


இந்த சலுகை வசதி ஆகஸ்ட் 31ம் தேதி வரை இருக்கும். எமிரேட்ஸ் விமானத்தில் பயணிப்பவர்கள் துபாயின் சுற்றுலா பகுதிகளை பல்வேறு சலுகைகளுடன் சுற்றிப் பார்க்கலாம். இந்த பாஸ் மூலம் 65 பிரபல உணவு விடுதிகள், ஹோட்டல்கள், பாலைவன சஃபாரி, கோல்ஃப் விளையாட்டு, ஹெலி காப்டர் சுற்றுலா உள்ளிட்ட இடங் களில் தள்ளுபடி சலுகைகளைப் பெறலாம். 

துபாய் பொருளாதார மேம்பாட்டுத் துறையும், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸும் இணைந்து இத்தகைய சலுகைத் திட்டங்களை அறிவித்துள்ளன
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.